பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 குடி : என்னையா! சிரிக்கிறீங்க? வேடிக்கையா இருக்குதா என்னைப் பார்த்தா? (கூட்டத்தாரை அடிக்கக் கையை ஓங்கு கிருன். அவர்கள் பயந்து கொண்டு ஓடுகின் றனர். இச்சமயம் வள்ளுவர் அவ்விடத்தை நெருங்குகிருர். கு டி கா ர ன் அவ ைர நோக்கிப் போகிருன்.) - குடி : சாமியாரே! தாடி சாமியாரே! எங்கே போlங்க? கள் ளுக்கடைக்கா? (வள்ளுவர் அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டே ஒதுங்குகிருர்.) குடி : போ! போ! சாமியாரே! சரக்கு ஆயிடப்போவுது. இன் னிக்கு தென்னங்கள்ளு ரொம்பத் தித்திப்பா இருக்குது. குடிக்கக் குடிக்க தெவட்டவே இல்லே. கொஞ்சம் குடிச்சு தான் பாருங்களேன். (வள்ளுவர் அவனே வெறுப்போடு பார்த்து நிற்கிருர்.) குடி : சாமியாருக்கு தென்னங்கள்ளு பிடிக்கலேன்ன பனங் கள்ளு பதமா இருக்கு. ஈச்சங்கள்ளு வேணுமா? அதுவும் இருக்கு. இதுலே கொஞ்சம், அதுலே கொஞ்சம் குடிச்சுப் பாருங்களேன். ரொம்ப ஜோரா இருக்கும். கிள் ; உன்னைப் பார்த்தாலே தெரியுதே! குடிச்சா ரொம்ப ஜோரா இருக்கும்னு. குடி : பின்னே நீயுந்தான் குடிச்சுப் பாரையா, நான் சொல்றது நெசமா இல்லையான்னு? ஒரு மொந்தை உள்ளே போன நேரா சொர்க்கத்துக்கே கொண்டு போய் விட்டுடுது. என் காலேப் பாரு, தரையிலே பாவுதான்னு. வள் : ஏன் தம்பி! நீ குடித்துக் கெட்டுப் போவதுமில்லாமல், மற்றவர்களையும் குடித்துப் பார்க்கச் சொல்கிருயே!