பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 குடி : அப்படின்ன நான் சொல்றது தப்பா? வன் : தப்பில்லாமல்? குடி நம்மக் குடியைக் கெடுக்கும் என்று: உனக்குத் தெரியாதா? குடி நீ என்ன சாமியாரே! சொல்றே? எனக்கு ஒன்னும் புரி யலே. நீங்கள் கஞ்சா, அபினி குடிக்கிறீங்களே அது போலன்னு நினைச்சிக்கினிங்களா? இந்தக் கள்ளுக் குடிக்கிறதையும். வள் : நான் சாமியாருமில்லை, நீ சொல்கிற மாதிரி கஞ்சா குடிக்கிறவனுமில்லை; அபினி சாப்பிடுகிறவனுமில்லே. குடி அப்ப நீ எதுக்கும் லாயக்கில்லாத ஆசாமின்னு: சொல்லு. (கையை உதறி) சுத்த மோசம்! சுத்த மோசம்! (இச்சமயம் அவன் வயிறு குமட்டல் எடுத்து வாந்தி எடுக்கிருன். கூட்டத்தார் பதறிப் போய் விலகுகின்றனர். வள்ளுவர் அவனே இரக்கமாகப் பார்க்கிருர்.) வள் : பார்த்தாயா? தம்பி! உன் வயிற்றிலே போயிருக்கிற சரக்கு எப்படி யெப்படி எல்லாம் உன்னை ஆட்டிப்படைக் கிறது என்று. ...” குடி (தலையை ஒரு விதமாகச் சாய்த்துக்கொண்டு) என்னt என்ன சொல்றே? சாமியாரே! வள் : நீ குடித்திருக்கிற கள்ளு புளித்துப் போயல்லவா இருந்தது? குடி : ஆங்...... வள் : அது புளிக்கிறதற்காக காடிப் பானையிலே ஊமத்தங் காய் போன்றவைகளே அறுத்துப்:ேட்டு ஊற வைக்கி ருர்கள். புளிப்பு ஏற ஏற அது பொங்குகிறது; நுரைக்கிறது. அது போல அது குடிக்கிறவர்களேயும் போதை கொண்டு. ஆட வைக்கிறது. - - கூட்1 : அப்படிங்களா? ஐயா!