பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 31 வள் : அது உங்களுக்குத் தெரியாதா? அதுமட்டுமா? மரத்தி லிருந்து கள்ளிறக்கும் போதே ஈ, எறும்பெல்லாம் அதில் விழுந்திருக்கும். காவடியில் கொண்டு வரும் போது கொசு முதலிய பூச்சிகள் அதை மொய்த்துக் கொண்டு வந்து விழும். கடைசியாக, காடிப் பானேயிலும் பெரிய ஜாடி விலும் ஊறலோடு சேர்த்து ஊற வைக்கும்போது அதில் புழுவெல்லாம் உற்பத்தியாகி நெளிந்து கொண்டுஇருக்கும். இவ்வளவு மோசமான சரக்குதான் குடிகாரர்கள் வயிற் றிலே போய் விழுகிறது. கூட் : 2 : (வயிற்றைக் குமட்டியவாறு) இவ்வளவு மோசமான கள்ளையா குடிச்சி மனுசங்க கெட்டுப் போருங்க? குடலேக் கெடுத்துக் கொள்ளுகிருங்க? வள் : ஆமாம். ஆமாம். (இச்சமயம் குடிகாரன் குடிபோதை தலைக் கேற மயங்கிக் கீழே விழுகிறன். ஆல்ை, அவனே யாரும் விழவொட்டாது தாங்கிக் கொள்ளவில்லே.) வள் : துஞ்சிஞர் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” கிள் : அப்படியே ஒவியமா எழுதிக் காட்டியிருக்கார் இவர் பாடி வருகிற திருக்குறளிலே. இவரு பெரிய கவிஞர்; தெரி யுமா? கூட் , 1 : அப்பிடியா ஏங்க? ஐயா! இப்பிடிக் கள்ளுக் குடிச்சுக் கெட்டுப் போறவங்களைத் திருத்தவே முடியாதா? வள் : ஏன் முடியாது? வாலாயமாகக் கள் குடிப்பவர்கள் ஒரு நாள் குடிபோதையில் இல்லாமல் இருக்கிற போது, இதோ இந்த ஆள் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கூத்தடிக் கிருனே! இவனைப் போன்றவர்களைப் பார்க்கச் செய்தால் போதும். உடனே குடிப்பதை நிறுத்தி விடுவார்கள்.