பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 (போதையால் கீழே விழுந்தவன் வெகு நேரமாகியும் எழுந்திருக்காமல் போகவே மக்கள் அவன் இருக்குமிடத்திற்குப் போய் சூழ்ந்து கொள்கின்றனர். இச்சமயத்தில் வயதான மாது ஒருத்தி அப்பக்கமாக வந் தவள் கூட்டங் கூடி இருப்பதைப் பார்த்து விட்டு அது என்ன வென்று அறிய ஆவ லோடு கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே பார்க்கிருள்.) கிழவி (பதறி) அட பாவி குடிச்சுட்டு நீ இங்கேயா விழுந்து கிடக்கிறே? . ン* கிள் : இவனை உங்களுக்குத் தெரியுமா? பாட்டி! கூட் : 2 : இவன் உங்களுக்கு என்ன வேணும்? கிழவி : தெரியுமாவா? இவன் என் பாழும் வயித்திலே பிறந்த பிள்ளே, ஐயா! - வள் : (எல்லோர் காதிலும் விழும்படியாக) ஈன்ருள் முகத்தேயும் இன்னதால் என்மற்றுச் சான்ருேர் முகத்துக் களி.” கிழவி உன்னைப் பெற்ற வயிற்றிலே பெரண்டையை வச்சிக் கட்டாமே போயிட்டேனே! வள் : (பரிதாபமாக) பார்த்தீர்களா? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே மனம் நொந்து பழித்துப் பேசுகிற அளவுக்கு இழிவான நிலை உண்டாகிறது என்றல் இந்தக் குடி பெரி யவர்களுடைய உள்ளங்களை எவ்வளவு புண்படுத்தும் என்று எண்ணிப் பாருங்கள். உங்களில் யாரும், மறந்தும் கூட இந்தக் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளா தீர்கள், ஐயா! ஒருவர் : ஐயையோ சாமி இந்த ஆளுக்கு ஏற்பட்டிருக்கிற அவலத்தைக் கண்ணுலே பார்த்த பின்னும் கூடவா மனு விகுப் பிறந்தவனுக்கு, கள் குடிக்கத் தோணும்?