பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 வன்

இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் அவர்கள் உய்ந்து போவார்கள். (அவர் மெல்லக் கூட்டத்தை விட்டு அகல் கிருர்.) கிழ : (கீழே விழுந்திருக்கும் மகனைப் பார்த்து) து! (காரி உமிழ்ந்து விட்டு) நீ எக்கேடுங் கெட்டுப் போ! (வேகமாகப் போகிருள்.) ஒரு சாமியார் சொன்னதுபோல இந்தத் தாய்க்கு எவ்வளவு வெறுத்துப் போச்சு? பாத்தீங்களா குடிச்சிக் கிடக்கும் மகன் மேலே? (கூட்டம் மெல்ல மெல்லக் கலைகிறது.) காட்சி-28 காலம் : மாலே . இடம் : ஏலேலசிங்கர் இல்லம் உறுப்பினர் : ஏலேலசிங்கர், வள்ளுவர், குப்பத்துச் செம்படவர்கள். (செம்படவர்கள் சிலர் ஒரு பெரிய பொன் கட்டியைச் சிரமத்துடன் தூக்கிக்கொண்டு வருகிறர்கள். உள்ளே வீட்டுக் கூடத்தின் நடுவே வள்ளுவர் வீற்றிருக்க அவருடைய காலடியில் ஏலேலசிங்கர் பணிவாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிருர்.) செம் 1: ஐயா! செட்டியார் ஐயா! - (பேச்சு மும்முரத்தில் செம்படவர்கள் கூப் பிடுவது ஏலேலசிங்கர் செவியில் விழ வில்லை.) - செம் 2: ஐயா இல்லீங்களா? அம்மா!