பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 (அடுக்களேயிலிருந்து த ற் செ ய ல ள க வெளியே வந்த மரகதம்மாள் செம்படவர்கள் கூப்பிடுவதைக் கேட்டு விட்டு கணவருக்குத் தெரிவிக்கிருர்) மர : உங்களை யாரோ கூப்பிடுருங்க போலிருக்கே? ஏலே : ஊம். யாரது? செம் : நான்தாங்க சாமி. - ஏலே : இதோ வந்துவிட்டேன். (வள்ளுவரைப் பார்த்து) ஐயா! ஒரு நிமிடம் யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன். (எழுந்து வாயிலுக்குப் போகிருர்.) செம் : நாங்கள் காலேயிலே மீன் பிடிக்கப் போனப்போ பெரிய வலையிலே ஒரு சுருமீன் அகப்பட்டுது. அதன் வயிற்றிலே இந்தப் பொன் கட்டி இருந்ததுங்க; ஐயா! சலே : (வியப்புடன்) அப்படியா!. செம் : ஆமாங்க. (தாங்கள் கொண்டு வந்த கட்டியை ஏலேல. சிங்கர் முன்னிலையில் வைக்கிருர்கள். ஏலேலசிங்கர் அதைக் கூர்ந்து பார்க்கிருர்.) ஏலே (தமக்குள் நாம் சிலநாட்களுக்கு முன்னே கடலில் எறிந்த பொன் கட்டியல்லவா? இது. செம் 1 : இந்தப் பொன்கட்டி மேலே ஏதோ செதுக்கிக்கூட இருக்குங்கய்யா! ஏலே : ஆமாம். நான் பொறித்ததுதான். (உடனே எழுந்து உள்ளே வள்ளுவரிடம் போகிருர்.) அதிசயத்தைப் பார்த்தீங்களா? ஐயா! நீங்கள் சொன்னபடி கடலில் போட்ட பொன் கட்டி மறுபடி நம்மிடமே திரும்பி வந் திருக்கிறது. நம்ம செம்படவர்கள் பிடித்த சுருமீனின் வயிற்றி லிருந்ததாம், -