பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வள் : (புன்னகை செய்து) அது திரும்பி வரும் என்று எனக் குத் தெரியும். ஏலே : (பேராச்சரியத்துடன்) அப்படிங்களா? ஐயா! வள் : ஆம். நாம் உண்மையாக உழைத்துச் சம்பாதித்ததா யிருந்தால் எப்படியும் நம்மிடமே திரும்பி வரும். அற வழியில் சம்பாதித்த பொருள் ஒருகாலும் பிற வழியில் போகாது. தெரிந்து கொள்ளுங்கள். ஏலே இப்போது தான் எனக்கு உண்மை தெரிந்தது, ஐயா!' இப்பேருண்மையை நீங்கள் முன்னொரு நாள் சொல்லாமல் சொல்லிக் காட்டி விட்டீர்கள். கள்ளர் கண்ணிலிருந்துந் தப்பி விட்டதே ! என் அறியாமையைப் போக்கி வரும் உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? வள் பொன்கட்டியைத் திருப்பிக் கொண்டு வந்தவர்களுக்கு. ஏதாயினும் பரிசு கொடுத்தனுப்புங்கள். ஏலே கொடுக்க வேண்டியது தான். (எழுந்து போகிருர்): காட்சி-29 காலம் : காலை இடம் : மயிலாப்பூர் வீதி உறுப்பினர்கள் : கிள்ளுவன், மக்கள். (வீதியில் மக்கள் சிலர் பேசிக்கொண்டே போகின்றனர்.) மக் 1: உங்களுக்குத் தெரியுமா? ஐயா! நம்ம ஊரிலே வள்ளுவ ருன்னு ஒரு நெசவாளி இருக்காரே! அவர் ஒரு நீதி நூல் இயற்றி வருகிருராமே? - மக் 2: வள்ளுவரை எனக்குத் தெரியும். அவரிடம் வேட்டி, சீலைகூட வாங்கியிருக்கேன். ஆனல் அவர் பாட்டுப்பாடி வருகிருர் என்று தெரியாது.