பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மக் 3: நம்ம ஊர் பிரபுவான ஏலேலசிங்கரே அவரை உச்சி மேல் வைத்துப் பூசிக்கிருர் என்ருல், ஏதோ சரக்கு இருக்கத்தான் செய்யும். (இச்சமயம் வழியே போய்க் கொண்டிருந்த ஒருவன் வாய்விட்டு ஒரு குறளைச் சொல்லிக் கொண்டு போகிருன்.) வழிப்போக்கன் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? புன்கணிர் பூசல் தரும். (ஆர்வலர் மக் 4: அதோ பாடிக்கொண்டு போகிருனே ஒரு ஆள். அவன் பாடும் பாட்டுக்கூட வள்ளுவர் பாடிய பாட்டுதான். மக் 1 இவரைப் போல எல்லோருக்கும் பொருந்துவதான பொது நீதியை இதுவரை யாரும் பாடியதில்லை என்றும் அந்தப் பொருளேக் கூறுவதற்குக் கருவியாகக் கையாண் டுள்ள குறள் வெண்பாவில் நூலே யாரும் பாடியதில்லை என்றும் அறிஞர்களெல்லாம் வியந்து பேசுகிருர்கள். (கிள்ளுவன் இவர்கள் பேசுவதைக் கேட் டுக் கொண்டே வருகிருன்.) கிள் : என்ன? ஒரேயடியாப் பிரமாதப் படுத்துறிங்க? அந்தப் பித்துக்குளியின் பாட்டைப்பற்றி. அனுபவத்துக்கு ஒத்து வராததையெல்லாம் வார்த்தைகளாக் கொட்டி அளந்திருக் கிருன். அவன் நெய்யும் துணிகள் விலை போவதில்லை. இப்பிடிப் பாட்டுப் பாடிவைான ஜவுளி செலாவணியாகு. மான்னு சாகசஞ் செய்யருன். - - மக் 2 : கிள்ளுவா! எங்களண்டையே உன் வாய்ச் சவடாகலக் காட்டத் தொடங்கி விட்டாயே? வள்ளுவர் போன்ற மெத்தப் படித்தவர்களைப் பற்றியெல்லாம் இப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாதே! தம்பி! கெட்டுப் போவே. மக்3: ஆமாம்; பெரியவங்க மனசை நோவ வைப்பது நல்ல தல்ல.