பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கிள் : அந்த வள்ளுவனப் பற்றி உங்க எல்லோரையும் விட எனக்கு நன்னத் தெரியும். ஐயா! என் வீட்டுக்குப் பக். கத்திலேதான் அவனும் குடியிருக்கிருன். இந்த ஊரி லேயே நான்தான் அவனுக்கு முதல் சிநேகம். செட்டி யாரிடங்கூட நான்தான் அறிமுகப்படுத்தினேன். மக் 2 : இருக்கலாம். தவளே கூடத்தான் தாமரைக்குப் பக் கத்திலே இருக்கு. அதுக்கு அந்தப் பூவின் மணம் தெரிந்: துட்டது எனச் சொல்ல முடியுமா? மக் 3 : கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? கிள் : (கோபத்தோடு) என்னங்க ஐயா! கிறுக்கா பேசlங்க? மக் 1 : நீ மட்டும் மக்களுக்கு அறிவு புகட்டி வரும் அறிவாளி யைப் பற்றி அவதுருகப் பேசலாமா? கிள் : வள்ளுவன் சாயத்தை வெளுக்க வச்சி காட்டறேன் நான் ஒரு வம்பனே அனுப்பி, அப்பத்தான் உங்களுக்குத் தெரியும் அவனுடைய அளப்பைப்பற்றி. மக் 3 : போ; போ. வம்பை விலக்கு வாங்கி மடியிலே கட்டிக்கோ. : (அவர்கள் போகின்றனர். கிள்ளுவன் அவர் களுக்கு வெவ்வே” என்று அழகு. காட்டுகிருன்.) காட்சி-30 காலம் : பிற்பகல் இடம் : வள்ளுவர் வீடு உறுப்பினர் : வள்ளுவர், கிள்ளுவன், வம்பன். (கிள்ளுவன் வம்பைெருவனேக் கூட்டிக் கொண்டு வந்து வள்ளுவர் வீட்டிற்குப் போக விட்டு த்ான் வெளியே ஒளிந்து நிற்கின்றன்.)