பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கிள் : டே, மாடசாமி! வள்ளுவர் வீட்டிற்குள்தான் இருக் கிருர், நான் சொன்னபடி போய்க் கேளு; பயப்படாதே! வம் : எனக்குச் சொல்லித் தருகிருயா? நீ போ. பார்த்துக் கொள்கிறேன். அவர் என்ன விழுங்கி விடுவாரா? என்ன ! கிள் : வாய் வீரம் பெரிசில்லே, மாடா? நான் சொல்லிக் கொடுத்த குறளெல்லாம் ஞாபகமிருக்கட்டும். ஒன்னுக் கொன்ன உளறிக் கொட்டிடாதே! வம் சரிதான்; போ கிறுக்கண்ணேன்! (வம்பன் வள்ளுவர் வீட்டினுள் எட்டிப் பார்க்கிருன். அதே சமயத்தில் வள்ளுவர் தறியை விட்டு எழுந்து வருகிருர்) வம் : ஐயா! ஐயா! வள் : யாரது? என்ன வேணும்? வம் : வேட்டித் துணி வாங்க வந்தேனுங்க. வள் : அப்படியா? இரு. இதோ எடுத்துக்கொண்டு வரு கிறேன். எத்தனை முழ வேட்டி வேணும்? மேல் துண்டும் வேணுமா? வம் : நாலு முழம் வேட்டி வேணும். அதுக்குத் தகுந்தாப் போல மேல் துண்டும் வேணும்! உங்களிடம் இருப்பதை யெல்லாம் கொண்டாங்க; பார்ப்போம். . (வள்ளுவர் அறைக்குள் சென்று சில வேட்டி களையும் மேல் துண்டுகளையும் கொண்டு வருகிருர்) வள் : இதோ பார்; தம்பி விதவிதமான கரை போட்ட வேட்டிகளும், துண்டுகளும் இருக்கு. இவற்றில் எது பிடித்திருக்கிறதோ அதைப் பொறுக்கி எடுத்துக்கே: > - (வம்பன் தன்முன் வள்ளுவர் வைத்த வேட்டிகளையும், மேல் துண்டுகளையும் கண்டபடி பிரித்துப் பார்த்து தாறுமாருகக்