பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 விற்பனை செய்கிறர். இவர் அரிசியையும் நெல்லையும் அளந்து போடப் போட (அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியைப் போல) நெற்களஞ்சியத்தில் நெல்லும், அரிசியும் சிறிதும் குறையாமல் பெருகிக் கொண்டே போகிறது. கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த வள்ளுவர் இதைக் கண்டு புன்முறுவல் செய்கிருர். ஏலேல சிங்கர் பேராச்சரியத்தால் திகைத்துப் போ கிருர். காசை வாங்கிக் கொண்டு நெல்லை யும் அரிசியையும் அளந்து போடும் அவரது ஆட்களும் கை சளேத்துக் களைப்புற்று நிற் கின்றனர்.) கலே ; என்ன இது? வியப்பாயிருக்கிறதே! வள் : (முன் வந்து) இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லே, ஏலேலசிங்கரே! உங்கள் மனதைப்போல நெற்களஞ்சிய மும் விரிவடைந்து விட்டது. இரக்கத்தால் உங்கள் நெஞ்சில் அன்பு ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடுவது போல, நெற்களஞ்சியமும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிக் கொண்டே போகிறது. உங்கள் கஜானுவும் பொருளால் நிரம்புகிறது. ஏழை மக்கள் வயிறும் சோற்ருல் நிரம்பு கிறது. ஏலே : எல்லாம் ஐயா அவர்களுடைய அறிவுரையைக் கேட்டதால் ஏற்பட்ட நல்ல விளேவு இது. நான் இப்பிறவி எடுத்ததின் பயனே இன்று அடைந்து விட்டேன். வள் : மக்களிடம் ஜீவதயை காட்டுபவர்கள் ஆண்டவ னுடைய அருளே நிச்சயம் பெறுவார்கள். இந்த ஜீவகா ருண்யத் தொண்டைத் தொடர்ந்து நடத்தி வாருங்கள். ஏலே : அப்படியே! ஐயா! (ஆட்களைப் பார்த்து) நெற்களஞ் சியத்தைத் திறந்து விட்டுவிடுங்கள். இனி வருபவர்கள்