பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நிரம்ப உடையவர்கள். செல்வம் படைத்தவர்கள். இங்: கில்லாத பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய் தும் நம் நாட்டில் மிகுதியாக விளையக்கூடிய பொருள்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் கொள்ளை லாபம் சம் பாதிப்பவர்கள். ஆதலால், உங்களைப் போல் சகல வசதி: களும் படைத்தவர்கள் மனம் வைத்தால், எப்பேர்ப்பட்ட பஞ்சத்தையும் போக்கிவிட முடியும். பட்டினியைத் தீர்த்து மக்களின் பசிப்பிணியை உடனடியாக மாற்ற: முடியும். தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற உண்மையை அறிந்து நடவுங்கள். ஏலே: இப்போது நான் என்ன செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள், ஐயா! நான் உடனே செய்கிறேன். வள் : நீங்கள் வேருென்றும் செய்யவேண்டாம். ஏலேல சிங் கரே! உங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் நெல்லேயும். அரிசியையும் பட்டினியாலும் பசியாலும் வாடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு எவ்வளவு குறைந்த விலக்குக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு கொடுத்து உதவுங்கள். அதுபோதும். ஏைே: இப்போதே போய் நீங்கள் சொன்னபடியே செய்: கிறேன்; ஐயா! ஆபத்துக்குதவா விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? காட்சி-32 காலம் : காலை இடம் : ஏலேலசிங்கர் வீடு உறுப்பினர். ஏலேலசிங்கர், வள்ளுவர், ஏழை மக்கள். (ஏலேலசிங்கர் மிகக் குறைந்த விலைக்கு நெல்லையும் அரிசியையும் ஏழை மக்களுக்கு,