பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வள்ளுவர் கண்ணிர் உகுக்கிருர், பின் ஏதோ நினைத்துக்கொண்டு ஏலேலசிங்கர் வீடு நோக்கி விரைவாகப் போகிருர். அதே சமயத்தில் எதிரிலிருந்து ஏலேலசிங்கரே வருகிருர். அவர் வள்ளுவரைப் பார்த்து விட்டு வேகமாக வருகிருர்) ஏலே : எங்கே போகிறீர்கள்; ஐயா? வன் : (ஏறிட்டுப் பார்த்து) ஒ! நீங்கள் தான? உங்களைத்தான் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறேன். ஏலே : என்னைப் பார்க்க நீங்களே வரவேண்டுமா? என்ன? யாரிடமாயினும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா? நான் ஒடோடி வருவேனே! வள் : அது இருக்கட்டும். நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருக் கிறதே! மக்கள் பட்டினி கிடந்து பசிப்பிணியால் வாடு கிருர்களே? உங்களுக்குத் தெரியுமா? ஏலே : நன்ருகக் கேட்டீர்களே? ஐயா! வாணிபம் செய்பவ னுக்கு நாட்டு நடப்புத் தெரியாமல் இருக்கமுடியுமா? ஒரு சிறு மாறுதலேயும் நிகழ்ச்சியையும் அவன் கணித்து வைத்திருப்பானே! வள் : இந்த ஊரில் நீங்கள் தானே பெரிய மனிதர், பெரிய பணக்காரர், எல்லாம். நீங்களே நான் என்ன செய்ய முடியும் என்று சொன்னல், மற்றவர்கள் என்ன செய் வார்கள்? ஏலே : இதெல்லாம் அரசன் கவனித்துச் செய்யக்கூடிய காரி யங்கள், ஐயா! என்ன செல்வமிருந்தாலும் என் போன்ற வர்களால் சாத்தியமானவையல்ல. வள் : எல்லாவற்றையுமே அரசன் செய்வான், அரசாங்கம் செய்யும் என்று நாம் கை கட்டிக் கொண்டிருந்து விட் டால் காரியம் எப்படி நடக்கும்? நீங்கள் நிலபுல வசதிகள்