பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காட்சி-31 காலம் : பிற்பகல் இடம் : ஏல்ேலசிங்கர் வீடு உறுப்பினர் : வள்ளுவர், ஏலேலசிங்கர், பொது மக்கள் சிலர். (ஏழைகள் சிலர் வீடு வீடாக நுழைந்து பிச்சை கேட்கின்றனர். வள்ளுவர் இக் காட்சியைப் பார்த்துக் கொண்டே அவ்வழி யாக வருகிருர்) ஏழை 1 : பசி காதை அடைக்குது. சோறு இருந்தால் ஒரு கவளம் போடுங்கன்னுட்டு கரடியாய்க் கத்திலுைம் எந்த மகராஜியும் போடறதாய்க் காணுேம். ஏழை 2 அவங்கதான் எங்கே போவாங்க? பருவ மழை பேயாம தான், மானம் சதி பண்ணிடுதே? விளேஞ்சு வத் தாத்தானே எல்லார் வாய்க்கும் சோறும் கறியும் தாரான மாய்க் கிடைக்கும். - ஏழை 3 : நம்ம ஊர்லே மட்டும் இந்த நிலமைன்னு நினைக் காதீங்க. தெற்கத்தி சீமையெல்லாம்கூட அப்பிடித்தான் இருக்காம், பஞ்சம், பட்டினி, பசி என்று. குறை காலத்தை நாம எப்படித்தான் காலந் தள்ளப் போறமோ! வருகிற அறுவடையிலும் மகசூல் இல்லேன்ன நம்ம கதி அதோ கதிதான். - ஏ 1 : கண்ணே இருட்டிக்கினே போவுது. உப்புப் போட்ட தண்ணி தான் கிடைக்கல்லே. பச்சத்தண்ணியாச்சும் ஒரு வாய் கிடைக்குமா? (கேட்டுக் கொண்டே சுருண்டு கீழே விழுகிருன்.) ஏ 2 : அடடே ஆள் மயங்கி விட்டாரே! ஒடிப்போய் ஒரு குவளையில் தண்ணி கொண்டாங்கய்யா. . (இது கேட்டு ஒருவர் எதிரில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒடுகிறர். இக்காட்சியைக் கண்ட