பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 கூற்றத்தைக் கையால் விளித்தற்ருல் ஆற்றுவார்க்கு ஆற்ருதார் இன்ன செயல். இது கேட்டுக் கிள்ளுவன் வம்பனும் வள்ளுவரும் தன்ன வந்து பிடித்துக் கோள்வார்களோ என்று அஞ்சித் தலை தெறிக்க ஓடுகிருன்) வம் : இவ்வளவு விஷயம் இருக்கா? இதெல்லாந் தெரிஞ்சி ருந்த நான் கிள்ளுவன் பேச்சைக் கேட்டுட்டு இப்பிடிக் கிறுக்குத்தனஞ் செய்திருக்க மாட்டேன். நீங்க செவிட் டில் அறைந்த அறை என் புத்தியைத் தெணிவிச்சுட்டுது. இனி தான் யாருடைய கயமைப் பேச்சையும் கேட்க மாட்டேன். என்னைப் பெரு மனசு வச்சு மன்னிச்சிடுங்க, ஐயா! வள் : ஆண்டவன் உன்னை மன்னிக்கட்டும். இனி நீ எடுப் பார் கைப் பிள்ளையா விராதே; தம்பி! போய் வா. வம் : இனி புத்திசாலித்தனமா யிருந்து பிழைச்சுக்குவேன். வருகிறேன்; ஐயா! (போகிருன்). வள் : (தனக்குள்) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்! பாவம் அவனை அடித்து விட்டேன். (இரக்கத்தோடு அவனப் பார்க்கிருர்) -