பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வள் : (கோப நகை செய்து) ஒ! நான் எழுதியிருக்கிற குறள் கூட உனக்குத் தெரிந்திருக்கிறதே! அதைப் படித்து விட்டுத் தான் இப்படிப் பேரம் பண்ண வந்தாயா? வம் : ஆமாம். உங்களுடைய பொறுமையைச் சோதிக்கத் தான் கிள்ளுவன் என்ன அனுப்பிவைத்தான். ஒறுத்தாரை ஒன்ருக வையாரே! வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. என்று கூடப் பாடியிருப்பதாகச்சொன்னனே, அந்த மாங் காய் மடையன். நீங்க என்னடான்ன.........? (தன்னப் பற்றிச் சொல்வதைக் கேட்டுப் பயந்து தப்பியோட முயல்கிருன் கிள்ளு வன்). வள் ஒ! இது கிள்ளுவனின் குறும்புதான? வம் : ஆமாம்; அவன் விஷமஞ் செய்ய நான் வாங்கிக் கட்டிக் கொண்டேன் உங்களிடம். - . வள் : அது மட்டுமா சொன்னேன்? ஒறுத்தார்க்கு ஒருகாளை இன்பம் பொறுத்தார்க்கும் பொன்றும் துணையும் புகழ். - என்று கூடத்தான் விளக்கமாகப் பாடியிருக்கிறேன். ஆனால், அது எந்த அளவு வரை? எதற்கும் ஒரு அளவு உண்டல்லா? அது போல பொறுமை காட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு. நான் இன்னென்றையும் சொல்லி விருக்கிறேன். அதைக் கிள்ளுவன் உனக்குச் சொல்ல வில்லை போலிருக்கிறது. வம் : அது என்ன? ஐயா! வள்: கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்றுபவர் கண்.இழுக்கு. என்றும் நான் சொல்லியிருக்கிறேன். இன்னுெரு குறளை. யும் தெரிந்து கொண்டு போ. - . . . ."