பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கக் (மெல்லிய குரலில்) பெருந்தேவி! பெருந்தேவி!

பெ : (அதட்டலாக) யாரது?

கக் : நான் தான் பெருந்தேவி! தெரியலையா?

பெண் : நான் தான் என்றால்?

கக் : என்ன இப்படிக் கேட்கிறாயே? நான் உன்னை நாடி வந்திருப்பது தெரிந்துதானே கதவைத் திறந்துகிட்டுக் கொல்லைப்புறம் வந்தே? என்னத் தெரியாதது போல யாரு யாருன்னு அதட்டறியே!

பெ: பொம்மனாட்டி புழக்கடைக்கு வந்தா நீ யாருய்யா திருட்டுத்தனமா வந்து வாய்க்கு வந்தபடி பேசறது? நீ எந்தப் பக்கமா உள்ளே வந்தே? எதுக்கு வந்தே? அதுவும், ஆம்பிளே வீட்டுலே இல்லாத சமயமாப் பார்த்து.

கக் : உன் ஆம்படையான் வெளியூருக்குப் போயிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் நான் வந்தேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு எதிர்பார்த்து எத்தனை நாளா ஏங்கிக்கிட்டிருந்தேன்.

பெ : சீ! என்ன பேச்சய்யா பேசறே? இருட்டுலே உன் மொகரக்கட்டை தெரியலே காறித் துப்புறதுக்கு.

கக்: நான் யாருன்னு தெரிஞ்சா இப்படியெல்லாம் பேச மாட்டே? பெருந்தேவி! அதிர்ஷ்டம் நம்மெத் தேடி வந் திருக்குதுன்னு உச்சி குளிர்ந்து போயிடுவே. என்ன இரண்டு கையையும் நீட்டி வரவேற்பே.

பெ: ஒருத்தர் வூட்டுலே அத்துமீறி அர்த்த இராத்திரியிலே திருடன்போல நுழையறவன் எப்படிப் பெரிய மனுஷனா இருக்க முடியுமின்னு தெரியலேயே!.

கக்: விஷயம் தெரியாமே பேசறே உன் அழகுதான் என்ன என் பெருமை, அந்தஸ்து, பணம் எல்லாத்தையும் மறந்துட்டு வர வைச்சிருக்கு. உன்னை முதல் முதலா எப்பப் பார்த்தேனோ அப்போதிருந்தே என் மனசெ உன்னிடம்