பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 சொல்லிட்டுப் போனர். எதிர்த்தாப் போலிருக்கிற நம்மெ. நம்பித்தான் அவரு பொஞ்சாதியைத் தனியா விட்டுட்டுப். போயிருக்கார். இந்த மாதிரி சந்தர்ப்பத்துலே நாம ஒத் தாசையா இல்லேன்ன, நாளை நமக்கு ஒன்னு ஆன மற்ற வங்க எப்பிடி உதவியா வருவாங்க? பூத : (எரிச்சலாக) அதுதான் என்ன செய்யனும்னு கேக்க றேனே? - கிள் : வா! நாம ரெண்டுபேரும் போய்ப் பார்க்கலாம். அங்கே யாரு போனது? திருடன்தானுன்னு. பூத : (ஏளனமாக) பொம்மனுட்டி நான் உன்கூட வரணுமா? போய்ப் பார்த்துட்டுவர உனக்குத் தைரியமில்லே? நீயும் ஒரு ஆம்பிளேய வந்து பொறந்துட்டியே மீசையெ வைச்சிக்கினு...? கிள் : என்ன பூதகி! அப்படி சொல்லிட்டே? (மீசைமீது கை வைத்து) நான் ஆம்பிள்ளே சிங்கம். தெரிஞ்சுக்கோ! எனக்கொன்னும் பயமில்லே. இதோ போறேன். திருடனு. இருந்தா அப்பிடியே பிடிச்சுத் தள்ளிக்கினு வந்துடுறேன், பாரு. பூத (சிரித்து) அதுதான் வேனுங்கறேன். போயிட்டு வா!' என் ஆம்பிளே சிங்கமே! (கிள்ளுவன் மிடுக்காகப் போகிருன். சிறிது. துாரம் போனதுமே அச்சத்தால் அவன் நடை தயங்குகிறது. இதற்குள் சிறிது முன் சென்ற ஆள் மதில் மீதேறிப் புறக்கடையில் குதித்து விடுகிருன், கிள்ளுவன் மதிலோ ரம் போய் உற்றுக் கவனிக்கிறன். சிறிது நேரம் வரை எவ்வித சந்தடியும் கேட்காம. லிருக்கவே, அவன் திரும்ப முயல்கிருன்.. இச்சமயம் புறக்கடைக் கதவு திறப்பது போல ஒசை கேட்கிறது. ஆண்குரலொன்று: மெல்லப் பேசும் ஒலியும் கேட்கிறது.)