பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கொண்டே கம்புகளைத் தூக்கிக் காட்டுகிருர் கள். வள்ளுவர் இவைகளே யெல்லாம் பார்த்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகல்கிருர்.) காட்சி 34 காலம் : இரவு முதல் சாமம் இடம் : கோவூர் கிழார் வீடு உறுப்பினர்கள் : கிள்ளுவன், பூதகி, நக்கண்ணன், வள்ளுவர், மக்கள். (கிள்ளுவன் தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கிருன். எதிர் வரிசையில் நக் கண்ணன் இருட்டில் பம்பிப்பதுங்கிப் போகி ருன். இதைக் கவனித்துவிட்ட கிள்ளுவன் திண்ணேயில் இருந்து பரபரப்பாக இறங்கு கிருன்.) கிள் : (வீட்டினுள்ளே பார்த்தவாறு) பூதகி பூதகி யாரே திருடன் போலிருக்கு எதிர் வீட்டுப்பக்கமாப் போருன். ஒடி வாயேன். பூத : (உள்ளிருந்தவாறே) உனக்கு இதே வேலையா போச்சு, ஐயா! யார் எங்கே போருங்க, வாருங்கன்னு கணக் கெடுக்கிறது? திருடன் நம்ம வீட்டிலே நுழையலேயே? கிள் : எதிர்த்த வீட்டுலே நுழையறவன் நம்ம வீட்டுக்கு வர எவ்வளவு நாழியாகும்? ஏதான காணுமே போயிட்டா மட்டும் லபோ திபோன்னு கத்தத் தெரியும் உனக்கு. யூத : (ஆத்திரத்தோடு வெளியே வந்து) நீ இப்போ என்ன - செய்யனுமிங்கிறே? . . " கிள் : கோவூர்கிழார்கூட ஊரிலே இல்லே. ஏதோ ஜோலியா காகலயிலேதான் குன்றத்தூருக்குப் போயிட்டு வரேன்னு