பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 மக் 1 : ஐயா சொல்றது நியாயந்தான், ஐயன்மாரே! வே 1 : ரொம்ப நியாயத்தைக் கண்டுவிட்டீர்கள்? வேத. சாஸ்திரம் படித்துப் பாண்டித்தியம் பெற்றுள்ள எங்களே விட உங்களுக்கு தரும நியாயம் தெரிந்துபோச்சோ? வே 2 : அவர்களோடு என்ன பேச்சு? ஒய்! நீர் ஆடுகளே அவிழ்த்துக்கொண்டு வாரும். (இரு வேதியர்கள் ஆடுகளை அவிழ்க்கப் போகிருர்கள்.) தவள் (வருத்தமாக) எவ்வளவு சொல்லியும் இவர்கள் கேட்க வில்லையே? - மக் 1 : மரியாதையாகச் சொன்னுல் கேட்க மாட்டாங்க. ரெண்டுபேர் எங்களோடு வாங்கய்யா? மக் 2 : இதோ வந்துட்டோம். - (ஆடு மாடுகளை அவிழ்த்துக் கொண்டு இருந்த வேதியர்களிடம் மக்கள் வேகமாகப் போகின்றனர். போய் அவர்கள் பிடித் திருந்த ஆடுகளே விடுவித்துத் துரிதமாக ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். வள்ளுவர் இது கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிறர்.) வள் : நல்ல வேலை செய்தீர்கள். உங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயம் கிடைக்கும். வே 1 : ஐயையோ! சூத்திர பசங்க செய்யற அக்கிரமத்தைப் பார்த்தீங்களா? கேள்வி கேட்பார் இல்லையா? வே 2 : இவன்கள் ரெளரவாதி.நரகத்துக்குத்தான் போவான் கள். மக் 2 : சரிதான் போங்கய்யா! நாங்க நரகத்துக்குப் போ ருேம். நீங்க இப்போதே மோட்சத்துக்குப் போங்க. (கேலி செய்து கொண்டே போகின்றனர். வேதியர்கள் அவர்களை வசை பாடிக்