பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மக் 1 : என்ன ஐயா! அவரை மிரட்டறே? நியாயத்தைக் கேட்டா? வன் : (கையமர்த்தி) நீங்கள் இருங்கள்.--வேதியரே! விலங்கு களே நாலு பேர் கண்முன்னுல் கொலே செய்தால் அதை இரக்க நெஞ்சமுள்ள யாரும் கேட்கத்தான் செய்வார். நம்ம மூதாதையர்கள் காலத்திலேயே புத்தர் பிரானும் மகா வீரரும் இந்தக் கொலே வேள்வியை வன்மையாகக் கண்டித்திருக்கிருர்கள்; எதிர்த்துப் போராடியிருக்கிருர் கள். எத்தனையோ யாகங்களைத் தடுத்து நிறுத்தியிருக் கிருர்கள். தெரியாதா உங்களுக்கு? வே 1 : ஒ நீர் அந்த் வேத வேள்வியை நிந்தனை செய்து பரம நாத்திகர்களாகத் திரிந்த புத்தன், அருகன் வகைய ராவைச் சேர்ந்தவரோ? இது தெரியாமல் இவ்வளவு நேரம் உம்மிடம் பேசியிருந்து விட்டோமே! மகா பாவந் தான் வந்து சேரும் எங்களுக்கு. வன் : (சீற்றத்துடன்) இந்த ஆடுகளின் ஆவிகளைப் போக்கப் போகிறீர்களே. அவைகளைத் துடிக்கப் பதைக்க வைக் கப் போகிறீர்களே. இக்கொடுஞ் செயல்தான் உங்களுக் குப் பாவத்தை உண்டாக்கும். 'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணுமை கன்று.” என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். வே 1 : அட! இவரு கவி பாடுகிருரு. - வள் என்னைக் கேலி செய்வது இருக்கட்டும். முதலில் இந் தக் கொல் பாதகத்தை நிறுத்துங்கள். உங்களை இந்த ஆடுகள் மட்டும் அல்லாமல் எல்லா உயிர்களுமே நீங்கள் இருக்கும் திக்கு நோக்கி கைகூப்பித் தொழும். கொல்லான் புலால மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருக் தொழும்: