பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வள் : வாசுகி கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிருயா? வா : (த.கல்யசைத்துவிட்டு மெல்லிய குரலில்) வேண்டாம். நாதா நீங்கள் என் பக்கத்தில் வந்து இப்படி உட்காருங் கள். வள் : (அருகில் அமர்ந்து வாசுகியின் முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு நெற்றியைத் தொட்டுப் பார்த்த வாறே) என்ன வாசுகி? என்ன வேண்டும்? வா : எனக்கு ஒன்றும் வேண்டாம்; நாதா! வள் : உன் பெற்ருேருக்கு இப்போதாயினும் தகவல் சொல்லி யனுப்பட்டுமா? அவர்கள் உன்னை வந்து பார்த்தால், உனக்குத் தெம்பாகக்கூட இருக்கும். ஏன் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிருய்? வா நீங்கள் என்னுடன் இருக்கும் போது வேறு யார் வந்து பார்க்க வேண்டும்? ஒத்தாசை செய்ய வேண்டும்? வள் : என்ன இருந்தாலும், அவர்கள் உன்னைப் பெற்ற தாய் தந்தையரில்லையா? அவர்களுடைய அன்பும் ஆதரவும் உனக்குப் புத்துயிர் அளிக்கக்கூடும். வா : உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேன்; நாதா! நான் என்று உங்களுக்கு மாலேயிட்டு வாழ்க்கைத் துணைவியாக வந்துவிட்டேனே, அன்றே நீங்கள் என் கணவர் மட்டுமல்ல; தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லா மாக மதித்துப் போற்றி வழிபட்டு வருகிறேன் என்று. அப் படியிருக்க, பற்றறுந்து போன பழைய பந்த பாசத்தைப் பற்றி நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்களே! நீங் கள் என் மனநிலையைச் சோதிக்கிறீர்களா? என்ன!