பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 வா : உங்கள் திருவாயிலிருந்து மலர்ந்துள்ள ஒவ்வொரு. திருக்குறளும் விலேமதிக்க முடியாத மாணிக்கம். 1330 அருங்குறள்களும் உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒப்பற்ற நீதிநெறி முறைகளைக் கொண்டவை. உலகில் உள்ள ஒவ்வொரு சாதி, சமய, இன, மொழி, நாட்டு மக்களுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது மறை. அது மட்டுமன்று, இது ஒரு பேரற நூல் ஆகும். இதன் சிறப்பை உலகமுழுதும் அறிந்து பெரும் பயன் அடைய வேண்டும் என்பது என்னுடைய தணியாத ஆசை. இந்த ஆவலேத்தான் என்னுடைய இறுதி வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பிரார்த்தனையை. மனப் பூர்வமாக ஏற்று நிறைவேற்றினர்களானல் அதுவே நான் பிறந்த பயனை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். வள் : வாசுகி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கிரம் நான் திருக்குறளை எடுத்துக் கொண்டு போய். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றிவிட்டு வருவேன். உன் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன். இதை, நீ உறுதியாக நம்பலாம். முதலில் உன் நோய் சிக்கிரம் குணமடையட்டும். வா : நாதா இன்னென்று உங்களைக் கேட்க வேண்டும். இந்த எண்ணம் நீண்ட நாளாக என் மனதைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. வள் : அது என்ன? வாசுகி! வா வேறென்றுமில்லை. நாதா! நாம் இல்வாழ்க்கை தொடங்கிய பின்னர் நான் உங்களுக்கு உணவு பரிமாறும் போதெல்லாம் ஒரு வள்ளத்தில் நீரும் ஊசியொன்றும் கொண்டு வந்து வைக்குமாறு தவருமல் சொல்வீர்களே! அது எதற்கு?எதற்காகக் கேட்கிறீர்கள்? என்பது இத்தனை ஆண்டுகளாகியும் புரியவில்லை. அன்பு கூர்ந்து அதற்குரிய, காரணத்தை எனக்கு விளக்கவேண்டும். ஐயனே!