பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 வள் : இச்சிறு விஷயத்தை உன் மனத்தில் வைத்து இத்தனை ஆண்டுகள் ஏன் உலப்பிக் கொண்டிருக்க வேண்டும். முன்பே கேட்டிருக்கலாமே? வன : கணவன் கட்டளே எதுவானுலும் அதை உடனே திறை வேற்றுவது மனைவியினுடைய தலேயாய கடமையாகும்; அது பற்றி வினவுவது முறையல்ல என்று மெளனமா யிருந்தேன் நாதா! வன் : ஒ! அப்படியா? வள்ளத்தில் நீரும் ஊசியும் கேட்ட தற்குக் காரணம் நீ தாலத்தில் உணவைப் பரிமாறுகையில் சேற்றுப்பருக்கை வெளியே சிந்திவிட்டால், அதை ஊசியால் குத்தி எடுத்துக் கிண்ணத்தில் உள்ள நீரில் கழுவி உணவுடன் கலந்து கொள்வதற்காகத்தான். ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஒருநாளும் சோறு கறிகளை உண்கலத்திலன்றி வெளியே சிந்தும் படியாக நீ பரி மாறியதே இல்லை. ஆகவே, வள்ளத்தில் உள்ள நீருக்கும் ஊசிக்கும் வேலையே ஏற்படவேயில்லை. வன : அப்படியா? நாதா! நான் பெரும் பேறு பெற்றுவிட்டேன். (வாசுகி நிம்மதியாக கண்களை மூடுகிருள். வள்ளுவர் பரபரப்புடன் அவளுடைய நாடி யைப் பிடித்துப் பார்க்கிறர்.) வன : (மெல்லிய குரலில்) நாதா! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து புகட்டுங்கள். - (வள்ளுவர் விரைந்து சென்று தண்ணிர் கொண்டு வந்து புகட்டுகிருள்.) வன : (தண்ணிரை மெல்ல அருந்தி விட்டு) நாதா! தயவு செய்து நீங்கள் தலமாட்டில் அமர்ந்து என் தலையை எடுத்து உங்கள் மடிமீது வைத்துக் கொள்கிறீர்களா? வள் : ஒ!