பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 (தல்மாட்டில் அமர்ந்து வாசுகியின் தலையை மெல்லப் பிடித்து தம் மடிமீது வைத்துக்கொண்டு விசிறியால் விசிறு கிருர். அடுத்த கணம் வாசுகி தன் கன்னத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டிருந்த கணவ ருடைய கரங்களைப் பற்றியவாறே அமைதி யாக உயிர் விடுகிருள். இதைக் கண்டதும் வள்ளுவர் துயருடன் மனைவியினுடைய முகத்தைப் பார்க்கிருர். அவருடைய கண் களிலிருந்து இரு சொட்டுக் கண்ணிர் வாசுகியின் முகத்தின் மீது விழுகிறது.) வன் : (துயரத்தோடு பாடுகிறர்) அடிசிற் கினியாளே! அன்புடை யாளே! படிசொல் தவருத பாவாய்! - அடிவருடிப் பின்துங்கி முன்எழுந்த பாவையே! போதியோ? என்துங்கும் என்கண் இரா. (இத்துயர ஒலியைக் கேட்டுக் கொண்டே வந்த ஏலேலசிங்கர் வாசுகி அம்மை இயற்கை எய்திவிட்ட நிலையைக் கண்டு கண் கலங்குகிருர்.) காட்சி-36 காலம் : முற்பகல் இடம்: மதுரை செல்லும் வழி உறுப்பினர்: வள்ளுவர், இடைக்காடர், ஒளவையார். (பெருமழை பெய்து கொண்டிருக்கிறது. சிறிது தூரம் நனைந்து கொண்டே சென்ற வள்ளுவர் எதிரில் கண்ட ஒர் ஆலமரத்தின்