பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அடியில் போய் ஒதுங்குகிருர், அவருக்கு முன்பே அவ்விடத்தில் இடைக்காடர் ஒதுங்கியிருக்கிருர்.) இடை : வாரும், ஐயா! புத்தகத்துப் பேயரே! ஏன் மழைத் துrறலில் நிற்கிறீர்? உள்ளே தள்ளி வந்து இந்தச் சிற்றிலேயின் கீழ் நில்லும். (வள்ளுவர் இக்குரல் கேட்டு இடைக்காட ரைத் திரும்பிப் பார்க்கிருர்.) வள் : மிக்க நன்றி, ஐயா! இடை : நீர் எங்கிருந்து வருகிறீர்? எங்கே போகிறீர்? வள் : மயிலேயிருந்து வருகிறேன்; மதுரைக்குப் போகிறேன். இடை : ஒl-உம் கையிலிருக்கும் சுவடி என்ன? - வள் : இது ஒரு நூல்; ஐயா! இடை : நீர் எழுதியதா? வள் : ஆமாம்: ஐயா! இடை : எது பற்றி எழுதியிருக்கிறீர்? வள் : மக்கள் வாழ்க்கை குறித்து மக்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி யெப்படியெல்லாம் ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இலக்கணம் வகுத்து. அறநூல் ஒன்று ஆக்கியிருக்கிறேன். - இடை : இந்நூலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்? வன் : திருக்குறள் என்று பெயர் வைத்திருக்கிறேன்; ஐயா! இடை நல்ல பெயர் தான். நீர் இதை அரங்கேற்றுவதற்காகத். "தான் போகிறீர் என்று நினைக்கிறேன். வள்: ஆமாம்; ஊகித்துக் கொண்டிர்களே!