பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 இடை : மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருக்கும் புலவன்களெல் லாம் பொல்லாதவன்கள். தங்களைவிட உலகில் படித்த வர்கள் இல்ல; பெரும் புலவர்கள் இல்லை என்ற ஆணவம் அவர்களுக்கு அதிகம். வள் இந்த அறிவாற்றல் ஒருவருக்கு மட்டும் உரியதல்ல; வல்லவர்களுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று அவர்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. இடை : நீர் அவர்களைச் சமாளித்து விடுவீர்; ஆலுைம், நானும் உம்மோடு துணைக்கு வருகிறேன். வள் : நல்லவர்கள் துணை நன்மை பயக்கும்; ஐயா! உங்கள் அலுவலுக்குக் குந்தகம் இல்லையென்ருல், என்னுடன் வாருங்கள். (இருவரும் சிறிது தூரம் சென்றதும் ஒளவையார் எதிர்ப்படுகிருர்) இடை : ஒளவையார் போலிருக்கே? > வள் : தம் ஒப்பற்ற பாடல்களால் உலகின் பெருமதிப்பைப் பெற்றுள்ள ஒளவை மூதாட்டியா? ஒள : ஆமாம். கோலையும் கூனையும் பார்த்துக் கூடவா தெரியவில்லை? இடைக்காடர் எப்போதும் இடக்காகப் பேசுவார் எல்லாவற்றையுந் தெரிந்து கொண்டே. வள் : (வியப்போடு) இவர் இடைக்காடரா? இது வரை இவரைத் தெரிந்து கொள்ளாமலே என்னென்னவோ பேசிக் கொண்டிருந்து விட்டேனே! . . ஒள : கைக்கோலேயும் போர்வையையும் முண்டாசையும் பார்த்து விட்டு, யாரோ ஆடு மாடு மேய்க்கும் இடையன் என்று எண்ணி விட்டீர் போலிருக்கு? - வள் : நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை; அம்மா! வெறும் வெளித்தோற்றத்தைப் பார்த்து விட்டு ஆளே மதிப்பிடுகிற வன் இல்லை நான். உருளும் பெரிய தேருக்கு அச்சாணி 10