பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 போன்றிருக்கும் மிகப் பெரியவர்களும் சாதாரணமாகக் காணப்படுகிறர்கள் என்பதை நான் அறிவேன். இடை : நீர் அழுத்தமான ஆள் தான். ஒனவை மூதாட்டி யாரே! இவரைப்பற்றி உங்களுக்குச் சொல்ல வில்லையே! இவர்......(வள்ளுவர் பக்கம் திரும்பி) ஐயா! ஊரைக் கேட் டேனே ஒழிய, உம் பெயரை கேட்கவில்லை. வம்பாக ஏதேதோ உரையாடிக் கொண்டிருந்ததில்.......... ara woo to or வள் : என்னே வள்ளுவன் என்று அழைப்பார்கள். இடை : புதுமையான பெயராயிருக்கே? ஒள : இவர் வள்ளுவக் குடியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நாஞ்சில் வள்ளுவன் என்று ஒருவன் கூட நாஞ்சில் மலைநாடு என்ற நாட்டை ஆண்டு கொண்டிருந் தான். இடை : நீங்கள் எல்லா நாடுகளுக்குஞ் சென்று மன்னர் களிடம் பொற்கிழி வாங்கி வருபவராயிற்றே! நீங்கள் சொன்னுல் சரியாய்த் தானிருக்கும். ஒள : பாண்டி நாட்டு மேற்குப் பகுதியில் இருக்கும் மலத்தொ டர்களின் நடுவே நாஞ்சில் மலே என்று ஒரு குன்று இருக்கிறது. அதைச் சூழவுள்ளது தான் நாஞ்சில் நாடு. அதைத்தான் நாஞ்சில் வள்ளுவன் ஆண்டு வந்தான். அவனுடைய மரபினர் பல அரசாங்கங்களில் பெரிய பதவிகளை வகித்து வருகிருர்கள். இக்குடிப் பெயரையே இவர் தம் இயற்பெயராக வைத்துக் கொண்டார் போலிருக்கு, - - - - வள்: நான் பிறந்த குடியைப் பற்றி எனக்கு ஒன்றுந் தெரியாது, அம்மா! அதுமட்டுமல்ல; என் தாய் தகப்பனர் யார் என்று கூடத் தெரியாது. நான் குழந்தைப் பருவத் திலேயே அநாதையாகி விட்டவன். துள்ளுவர் என்ற வேளாளர் என்னே எடுத்து வளர்த்து ஆளாக்கியிருக்கிருர், நான் கொஞ்ச காலம் தொண்டைமான் இளந்திரையன்