பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாடக சபை என்ற பெயரால் சொந்தமாக நாடகக் குழு வொன்றை ஏற்படுத்தி வள்ளலார்’ நாடகம் முதலியவைகளை நடத்தி வருபவர். - எத்தனையோ இன்னல் இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் நல்ல நாடகங்களை நடத்துவதிலேயே நாட்டங் கொண்டவரான ந எண் பர் இராச நாயகம் 1969-ம் ஆண்டில் ஒரு நாள் என்னிடம் திரு வள்ளுவர் வாழ்க்கையை நாடகமாக்கித் தரவேண்டுமென் றும் அதை நல்ல முறையில் நடத்திப் பெயர் பெற விரும்பு வதாகவும் நட்புரிமையுடன் வற்புறுத்திக் கேட்டு கொண் டார். அவர் ஏற்கனவே, வள்ளலார் நாடகத்தை எழுதித் தருமாறு கேட்டுத் தராமல் போய்விட்டேன். நீங்கள் எழுதித் தராததால் தான் நான் வேருெ ருவரைக் கொண்டு எழுதி நடித்தும் வெற்றி பெறவில்லை’ என என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஆதலால், இம் முறை அவர் வேண்டுகோளேக் கண்னேட் டமின்றிப் புறக்கணிக்க முடியவில்லை. அத்துடன், என் அன் புக்குரிய நண்பரான பிரபல நாடக ஆசிரியர் ரா. வேங் கடாசலம் இராச நாயகத்துக்காகப் பரிந்து வந்து என்ன எழுதித் தருமாறு வற்புறுத்தலானர். நான் இதுவரை டி.கே. எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவுக்குத் தவிர,எத்தனையோ பேர் கேட்டும் வேறு யாருக்கும் நாடகம் எழுதித் தந்ததில்லை. இதல்ை கலைவாணர் போன்ருருடைய மன வருத்தத்துக்குக் கூட நான் ஆளானதுண்டு. இது நண்பர் இராச நாயகத்துக் குத் தெரியும். ஆகவே, தயக்கத்துடன் நான், எழுத முயற்சிக் கிறேன்’ என்றேன். அடுத்த வாரமே அவர் ஜீவா எழுதும் திருவள்ளுவர் நாடகம் கவிஞர் வில்லி புத்தனின் பாடல்களு டன் வெகு விரைவில் அரங்கேறப் போகிறது’ என்று அச்ச டித்த விளம்பரத் தாளுடன் நண்பர் வில்லி புத்தனையும் அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்து விட்டார். இனி அவரிடமிருந்து தப்ப முடியாது என்று எண்ணி, உடனே