பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மற்றப்படி, நாடகத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகள் பலவற்றை, திருக்குறள் கருத்துக்களே அடிப்படையாகக் கொண்டே அமைத்திருக்கிறேன். இவற்றில் திருவள்ளுவர் கள்ளுண்டல், பிறன் மனே விழைதல், உயிர் பலி கொடுத்தல் போன்றவற்றைக் கண்டித்திருக்கிருர் எனக் காட்டி யிருக்கிறேன். கற்புடைத் தெய்வமாக ஆக்கி நாடகத்தில் வாசுகிக்கும் உயர்ந்த இடந் தந்திருக்கிறேன். மனேவியின் இறுதி வேண்டு கோளின்படி திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளே, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றி ஆறுதல் பெறுவ தாகக் காட்சியமைத்து நாடகத்தை முடித்திருப்பதை அறி ஞர்கள் கவனிக்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாகத் திருவள் ளுவர் வரலாற்றை இதே பெயரில் எழுதி வெளியிட்ட நான் இப்போது இந்நாடகத்தை எழுதுவதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டேன். திருவள்ளுவருடைய பெருமையை யும் திருக்குறளின் தனிச் சிறப்பையும் பரப்புவதற்காகத் தங்கள் கால முழுதும் அரும்பாடு பட்டு வந்த என் இயற் றமிழாசிரியர் திருக்குறள் விளக்கம் குப்புசாமி முதலியார், தமிழ்ப் பெருங்கடல் மறைமலையடிகளார் ஆகியவர்களின் அன்புக்குரிய மாணவன் என்ற முறையில் அவர்களுக்குப் பெருமை தரும் முறையிலேயே இந்நாடகத்தை இயற்றி யிருப்பதாக நான் எண்ணுகிறேன். ந - ன் இந் நாடகம் எழுதுவதற்கு மூலகாரணமாக இருந்த அன்பு நண்பர் இராச நாயகத்தை என்னல் மறக்க முடியாது. இவர் டி. கே. எஸ். சகோதரர்களின் நாடகக் குழு வில் முக்கிய நடிகராயிருந்து புகழ்பெற்றவர். அவர்களுக்கு உற வினருமாவார். நடிகவேள் எம். ஆர். இராதா நாடகங்கள் நடத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்த கால த் தி ல் துணிந்து அவருடைய நாடகக் குழுவை சென்னை மாநக ருக்குக் கொண்டு வந்து இரத்தக் கண்ணிர் முதலிய நாடகங்களைப் பிரபலப்படுத்தியவர். சங்கரதாச சுவாமிகள்