பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருவள்ளுவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்ருண்டுக்கு முற்பட்டது என அறுதியிட்டுக் கூறியுள்ள என்னுடைய பேராசிரியர் மறைமலையடிகளார் கபிலர் அகவல் கதையை அப்படியே ஒப்புக் கொண்டிருக்கிறர். சங்க காலப் புலவ ரான கபிலர் கூறிய கதையில் பிறழ்ச்சி யொன்றுமில்லை; சொற்போக்கு, பொருள் வளம், நடை முதலியவற்றை ஒப் பிடுவோர்க்கு இவ்வகவல் சங்க காலத்ததே என்பது புல ம்ை; ஆகையால், இ த ன் கண் கூறப்படும் உண்மைகள் கொள்ளத் தக்கனவே’’ என்று அவர் அழுத்தந் திருத்தமா கத் தெரிவித்திருக்கிருர், அத்துடன் அவர், "தம்மை ஈன் றெடுத்த தாய் தந்தையரை ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியர் போற்றுவதற்காகவே ஆதி பகவன்’ என்ற இரு சொற்களை யும் திருக்குறளில் முதற் கண் வைத்தார்’ என்றும் குறிப் பிட்டிருக்கிருர். திருவள்ளுவருடைய மனைவியின் பெயர் பாப்பம்மை அல்லது நாகம்மை என்றிருந்திருக்க வேண்டும், இத் தமிழ்ப் பெயர் பின் வாசுகி என வடமொழியாக்கப்பட்டி ருக்கலாம் என அவர் கருதுகிருர். அதுபோலவே வழித். துணைவர் என்ற தந்தையார் பெயர் மார்க்க சகாயர் என மாற்றப்பட்டிருக்க வேண்டும்’ என்று அவர் க ரு து கி ரு ர். 'மனைவாழ்க்கை, நெசவு நெய்து வாழ்ந்தது முதலிய யாவும் உண்மையோ பொய்யோ என்று துணிந்து கூறுதற்கில்லை’ என்றுந் தெரிவித்திருக்கிருர். எனவே, நான் மறைமலையடிகளார் போன்ற அறிஞர்கள் நடுநிலையில் நின்று ஒப்புக் கொண்ட செய்திகளை அடிப் படையாக வைத்துக் கொண்டுதான், இந் நாடகத்தை உரு. வாக்கியிருக்கிறேன். கற்பனைக் கதைகள் என நிச்சயமாகத் தெரிந்தும், காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட் டதே இன்பம்’ என்ற அடிப்படையில் வாழ்ந்த வாசுகியின் கற்பின் திறனே மங்கையர் உள்ளங்களில் பதிய வைப்பதற். காகவும் நாடக அரங்கில் சுவை சேர்த்து காண்போர் உள் ளங்களைக் கவர்வதற்காகவும் சில காட்சிகளை அமைத்திருக். கிறேன். -