பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிருக்கிறது. இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டே நான் பிறக்கும் போதே அநாதையாய் விடப்பட்ட திருவள்ளுவர் அரிதின் முயன்று அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்து வாழ்வில் உயர்ந்தார்; பிறர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக நின்ருர் என்று கூறும் கேள்வி வழிக்கதையையே பெரிதும் என் நாட கத்துக்கு அடிப்படையாகக் கொண்டேன். திருவள்ளுவர் என்றவுடனே நீண்ட காலமாகத் தமிழ் மக்களின் உள்ளங் களில் நிலைபெற்றுப் பசுமையாக இருந்து வரும் கதைக் கருவைப் பெரிதும் பயன்படுத்தி திருவள்ளுவரின் பேருருவைஇந்நாடக மூலம் காட்டப் பெரு முயற்சியெடுத்துக் கொண் டிருக்கிறேன். ஆனல், ப க வ ன ப் பார்ப்பனகைவும் ஆதியைப் புலேச்சியாகவுங் கொள்ளாமல், பகவனே முக்கோல் ஏந்திந் திரிந்த அந்தணத் துறவி என்றும், ஆதியை நற்குடி யொன்றில் பிறந்த நங்கை என்றும் கொண்டு இவ்விரு வருடைய காதல் வாழ்வில் பிறந்த மக்களில் ஒருவரே திரு வள்ளுவர் என என் நாடகத்தில் நிலைநாட்டியிருக்கிறேன். அத்துடன் வள்ளுவர் காஞ்சி மன்னனிடம் உட்படு கருமத் தலைவராய்ச் சில காலம் இருந்தார் என்றும் பின் அரசியல் சூழல் பிடிக்காமல் அப்பதவியிலிருந்து விலகி நெசவாளரானர் என்றும் பொருத்தமாகக் கற்பித்துக் காட்சிப் படுத்தியிருக் கிறேன். திருவள்ளுவர் திருமயிலையில் பிறந்து வளர்ந்தவர் என்ப தற்குத் தான் அதிக ஆதாரமிருக்கிறது. மயிலையில் திருவள்ளு வர்க்கென ஒரு கோயில் இருப்பதொன்றே போதிய சான்ரு கும். இது சில நூற்ருண்டுகளுக்கு முன்தான் கட்டப்பட்டது என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. திருவள்ளுவரின் மனைவியான வாசுகி காவிதிப் பாக்கத் தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது காவிரிப்பாக் கம் எனத் தற்போது வழங்கி வரும் ஊரில் வாசுகி வாழ்ந்து வந்த குடில் முதலியனவும், அவர் பெயராலும், அவருடைய தந்தையார் பெயராலும் வீதிகள், இடங்களும் இருப்பதி லிருந்து அறியலாம்.