பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மக்களிடையே தலைமுறை தகலமுறையாக வழங்கி வரும் செவிவழிச்செய்திகளே யன்றி, திருவள்ளுவ மாலை, திருக்குறள் சிறப்புப்பாயிரங்கள் ஆகியவைகளில் குறிப்பிடப்படும் வாழ்க் கைக்குறிப்புகள், ஞானமிர்தம் என்ற நூலில் கூறப்படும் கதை, கபிலர் அகவல் விவரிக்குங் கதை, சமண சமயத்தவரிடையே வழங்கும் கதை, புலவர் புராணம் ஆகியவை வாயிலாக, திரு வள்ளுவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒானவு அறிய முடி கிறது. மேற்குறித்தவற்றில் பெரும்பாலானவை திருவள்ளு வர் ஆதிக்கும் பகவனுக்கும் மகளுகப் பிறந்தவர், நெசவுத் தொழில் புரிந்தவர், மயிலையில் வாசுகியுடன் வாழ்ந்தவர் என்பவற்றை ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஞானமிர்த உரைக் கதைதான் யாளிதத்தன் என்பான் ஆதி என்ற சண்டாளிப் பெண்ணேக் கூடிப் பெற்ற ஏழு பிள்ளைகளில் திருவள்ளுவர் ஒருவர் எனக் கூறுகிறது. சமணர் கூறும் வரலாற்றில் மட்டும் கரமுண்டன் என்ற வைசியனுக்கும், சீமதி என்னும் பெண் ணுக்கும் மகளுகப் பிறந்த ஏலாச்சாரி என்பவரே திருக்குறளை இயற்றி அவருடைய மாணவரான திருவுள்ளம் நயினரிடந் தந்து சங்கத்தில் அரங்கேற்றுமாறு கட்டளையிட்டுச் சென்ருர். அதன்படி திருவுள்ளம் நயினர் சங்கப் புலவர் செருக்கடக்கித் திருக்குறளை அரங்கேற்றியதால், காலப்போக்கில் திருவள்ளுவ நாயனர் திருக்குறளைப் பாடினர் என வழங்கலாவிற்று என்று கதையளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறள் வாயிலாக, நாம் அறியும் திருவள்ளுவரின் மதி நுட்பமும் உலகியல் அறிவும் செல்வக் குடியில் பிறந்து வளர்ந்த ஒருவருக்குத்தான் இருக்கமுடியும் என்று அவரை அரச மர பினர், வேளாளக் குடியினர் என நிலநாட்ட முயன்ற அறிஞர்கள் முடிவு செய்திருக்கின்றனர். இதை என்னல் ஏற் றுக்கொள்ள முடியவில்லை. நுண் மாண் நுழை புலம் மக்க ளாய்ப் பிறந்த எல்லோர்க்கும் இயற்கையாக இருக்கக்கூடியது. மேதைமை உயர் குடியிற் பிறந்த ஒரு சிலர்க்கே உரியது எனக் கூறுவது பொருந்தாது. அத்துடன், கீழ்நிலயிலுள்ளோர் தன் முயற்சியால் மேல் நிலக்கு உயர்ந்தார் என்பதில் தான் சிறப்