பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 லாறுகள் ஒரு சிறிதும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த, காலம் தான் ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலுங்கூடப் பெரும்பாலும் ஒருமித்த கருத்து உருவாகவில்லே. பலதிறப் பட்ட கருத்துக்கள் பெருகிக் குழப்பந்தான் அதிகமாகியிருக். கிறது. இதற்குக் காரணம் நடுநிலையில் நின்று ஆராய்ச்சி நூல் செய்வோர் மிக அருகியிருப்பதுதான். பெரும்பாலோர் தாங்கள் ஒன்றை ஆராய்ச்சி செய்வதற்கு முன், அது பற்றித். தாம் முன்னதாகவே ஒரு முடிவு செய்துகொண்டு அக்கருத் துக்கு ஏற்ப ஆதாரங்களைத் தேடிக் காட்ட முயல்கின்றனர். திருவள்ளுவரைப்பற்றி வந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் பெரும்பாலும் இவ்வித நிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சி யாளர்கள் தங்களுக்குள் முன்கூட்டியே உருவாக்கிக் கொண் டுள்ள தங்கள் கருத்துக்களை நிலைநிறுத்துவதிலேயே கண் னுங் கருத்துமாயிருப்பதாலேயே, இதில் ஒரு தெளிவு ஏற்பட. வில்லை என நான் வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக் கிறது. .. திருவள்ளுவர் தொண்டை நன்னட்டில் திரு மயிலாப் பூரில் பிறந்து வாழ்ந்தவர்; ஆதிக்கும் பகவனுக்கும் பிறந். தவர்; வாழ்வில் பெரும்பகுதி நெசவுத் தொழில் செய்து வந்த வர் என்பவற்றை என்ன காரணத்தாலோ தென் தமிழ்நாட்டு அறிஞர் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பக்கம் மாதாநூ பங்கி மருவு புலச் செந்நாப் போதாச் புனற் கூடற்கு அச்சு என்று நல்கூர் வேள்வியார் பாடியுள்ள ஒன்றே முக் கால் அடியை ஆதாரமாக வைத்துக் கொண்டு திருவள்ளுவர் மதுரைக்குரியவர் என நாவலர் சோமசுந்தர பாரதியார் போன் ருர் தங்கள்.கருத்தை நிலைநாட்ட முயல்கின்றனர். மற்றுஞ்சிலர் காவிதிப்பாக்கம் வேளாளக் குடியிலிருந்து வாசுகியை மனைவி யாகக் கொண்டிருப்பதைக் காட்டி திருவள்ளுவர் வேளாளர் மரபில் பிறந்தவர் என்றும், நாஞ்சில் வள்ளுவனை நினைவு. படுத்தி வள்ளுவன் பெயர் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி அரச குடியில் தோன்றியவர் என்றும் வலியுறுத்திச் சொல்ல முயன் றிருக்கின்றனர்.