பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மக்களுக்குக் கூட இவர்களைப் பற்றிய உண்மையான வரலாறு களைச் சொல்லும் நிலையில் நாம் இல்லே. ஏனெனில், முற்காலத் தில் பெரியோர்கள், பெரும்புலவர்களுடைய வரலாறுகளைக் கூடக் குறித்து வைக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை குறித்து வைத்திருந்து அவ்வரலாறுகள் கால வெள் ளத்தில் மறைந்து போயிருக்கலாமோ என்று ஊகிப்பதற்கும் இடமில்லே. ஆகவே, திருக்குறளே இயற்றியவர் திருவள்ளு வர்; கீதையைத் தந்தவர் வேதவியாசர் என்று சொல்லும் அளவில்தான் நாம் இருக்கிருேம். அதற்குமேல் விவரமாக வாழ்க்கை வரலாற்றை விவரிக்க நம்மால் இயலவில்லே. இவ்விரு பெரும் அறிஞர் பெருமக்களுக்கு மட்டுமல்ல; வான்மீகி, காளிதாசன், கம்பன், பவபூதி, திருத்தக்கதேவர். முதலிய காப்பியப் புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் நல் விசைப் புலவர்களுக்கும் கூடச் சரியான வரலாறு கிடைக்க வில்லே. ஆகவே, வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மக் களிடையே வழங்கிவரும் செவிவழிச் செய்திகளையும் கதைகளே. யும் வைத்துத் தான், பண்டைக்காலப் புலவர்கள், கவிஞர்கள், அரசர்களுடைய சிறப்புக்களே அறிந்து போற்ற வேண்டியிருக் கிறது. வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள், பண்டைப் புலவர். கள், மன்னர்களுடைய வாழ்க்கையுண்மைகளை ஆராய்ந்து அறிவதற்குக் கூட, இச் செவிவழிக் கதைகளேத் தான் அடிப் படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. திருவள்ளுவருடைய உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள அறிஞர் பெருமக்கள் பலர் சென்ற நூற்ருண்டிலிருந்து ஆராய்ச்சி மூலம் முயன்று வருகின்றனர். ஆலுைம், அவர் களுடைய ஆராய்ச்சி யெல்லாம் போதிய அளவு பயனளிக்க வில்லை. . . . . . . . . . . . . . . . . . . . . . . தென்னிந்திய கல்வெட்டு ஆராய்ச்சி மூலம் தமிழ்மன்னர் கள், புலவர்கள், வள்ளல்கள் சிலருடைய வாழ்க்கைக் குறிப் புக்கள் ஓரளவு கிடைத்திருக்கின்றனவே யொழிய, தொல்காப் பியர், திருவள்ளுவர் போன்ற பெரும் புலவர்களுடைய வர