பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ந் துரை உலகப் பேரறிவாளர்களிடையே நம் நாட்டுப் புலவர் பெருமக்கள் பலவகைகளில் தனித்து நின்று பெருமை பெறத் தக்க தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் இயற்றியுள்ள அறிவு நூல்கள் இகவாழ்வுக்கு மட்டுமல்லாமல் பரம்பொருளை அடைவ" தற்கும் வழிகாட்டுபவை; நம் நாட்டு மக்களுக்கு மட்டுமே யன்றி, உலக முழுவதிலுமுள்ள எல்லா மக்களுடைய வாழ்க் கைக்கும் விளக்கந் தந்து உயர்த்துபவையாகும். ஆகவே தான், உலக இலக்கிய வரிசையில், நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் ஈடு இணையற்றவையாக விளங்குகின்றன. இவ் விதம் உலக இலக்கியங்களுக்குள் ஒப்பற்ற நிலையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் செழுமை மிக்க நம் இலக்கியச் செல்வங்களில் உலகம் உள்ள ளவும் நிலைபெற்று நிற்கத் தக்க அறிவு நூல்களே ஆராய்ந்து பார்க்கும் போது நம் அகக்கண் முன்னே முன் னணியில் வந்து நிற்பவை இரண்டு. ஒன்று திருக்குறள்; மற்ருென்று பகவத்கீதை. இவ்விரு பெரு நூல்களும் விவிலிய வேத நூலான பைபிளேப் போலவே, உலகில் வழங்கி வரும் பெரும்பாலான மொழிகளில் ஆக்கப்பட்டுப் பயிலப்பட்டு வரு கின்றன. - இவற்றிலுங்கூட, திருக்குறள் உலகிலுள்ள எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகப் பொது நீதியைப். போதிப்பதால் உலகப் பொதுமறை” என ஒரு முகமாக உலகப் பேரறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. தத்துவ ஞானத்தை உணர்ந்து கொள்ள விரும்புவோர் கீதையைச் சிறந்த ஒன்ருகப் போற்றுகின்றனர். இல்வளவு சிறப்புமிக்க அறிவு நூல்களைச் செய்த நல்லா சிரியர்களைக் குறித்து அறிந்து கொள்ள உலகம் அவாவி நிற் கிறது. ஆனல், பிற நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; நம் நாட்டு