பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அடிப்படையிலேயே இந்நாடகத்தைப் படைத்திருக்கின்ருர். ஆசிரியரின் நீண்ட கால அனுபவமும் கற்பனையும் நாடகத் திற்கு மேலும் மெருகூட்டியிருக்கின்றன. செவிவழிச் செய்தியாக நம் தாய்மார்கள் உள்ளத்தில் பதிந்துள்ள தெய்வீக நிகழ்ச்சிகள் எதையும் ஆசிரியர் ஒதுக்கி விடவில்லை. அவற்றிற்கு மேலும் மெருகூட்டி உள்ளத்தில் பதியுமாறு காட்சிகளே உருவாக்கியிருக்கிருர்கள். நாடகத்தின் நகைச்சுவைக்காக ஆசிரியர் படைத்துள்ள கிள்ளுவன், தகி ஆகிய பாத்திரங்கள் நகைச் சுவிையின விரும்புவோருக்கு மகிழ்ச்சி யூட்டுவார்கள் என்பதில் ஐயமில்லே. திரு. தாரன - துரைக்கண்ணன் அ வ ர் க ளி ன் 'திருவள்ளுவர் நாடகம் நாடெங்கும் மேடைகளில் நடிக்கப் பெற்றுப் புகழ் பெற வேண்டும் என்ற என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியரின் இந்த நற்பணியைத் தமிழுலகம் நல்ல முறையில் வரவேற்று ஆதரிக்க வேண்டு. மென்பது என் வேண்டுகோள். i5-5.7i - தி. க. ஷண்முகம்