பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 கவுணியனர் : வள்ளுவரே! உம்முடைய இன் குறள் சிந்தைக்கு இனியது! செவிக்கு இனியது. வாய்க்கு இனி யது. வந்த இருவினைக்கு மாமருந்து; ஐயா! இடை : (சங்கப் புலவர்களைப் பார்த்து) நீங்கள் எல்லாம் புகழ்ந்துரைத்து விட்டீர்கள் அல்லவா? வள்ளுவர் குற ளுக்கு என் பாராட்டைக் கேளுங்கள்: கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள். ஒள : கடுகு கூட பெரிது, ஐயா இடைக்காடரே வள்ளுவர் . தம் ஆற்றலால் அணுவையும் துளேத்து விட்டார். அணுவைத் துனைத்து எழுகடலப் புகட்டி குறுகத் தரித்த குறள். . உரு : (நகைத்தவாறு) எல்லாரும் சேர்ந்து வள்ளுவரைப் புகழ் மழையில் குளிர்வித்து விட்டீர்கள். என்னைக் கேட் . டால் இதுகூடக் காணுது என்பேன். உக் : வள்ளுவரே! நீரும் எங்கள் தமிழ்ச்சங்கத்தில் புலவராய் - வீற்றிருந்து சிறப்புச் செய்யவேண்டும். - கக் : ஆமாம். எங்களுடன் இருந்து நீங்களும் நம் தாய் . மொழியை வளப்படுத்துங்களேன். வள் : உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கமுடியாத நிலையிலிருப்பதற்கு வருந்துகிறேன். எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கின்றன. நான் உடனே ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இறை : வள்ளுவரை வற்புறுத்தாதீர்கள். அவர் வையகம் முழுவதற்கும் உரியவர். நாம் மதுரைத் தமிழ்ச்சங்க மண்டபத்துக்குள் அவரை அடைத்துவிடக் கூடாது. ஐயா! நீங்கள் உங்கள் விருப்பப்படியே போய் வாருங்கள். உரு : நீங்கள் உங்கள் ஊருக்குத் திரும்புவதற்கு முன் சிரமம் பார்க்காது பொதியமலைக்குச் செல்ல வேண்டும். அங்கு