பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 நம் தமிழ் வளத்துக்காகவே தவம் புரிந்து கொண்டிருக்கும். அகத்திய முனிவரிடம் திருக்குறளைக் காட்டி அவருடைய வாழ்த்தையும் பெற்றுக்கொண்டு செல்லுங்கள், ஐயா! வள் : உங்கள் யோசனைக்கு நன்றி; உருத்திர சன்மரே! நீங் கள் கூறியபடியே தமிழ் தந்த தவ முனிவரைத் தரிசித்து திருக்குறளே அவருடைய திருவடிகளில் வைத்து அருள் ஆசி பெற்றுத் திரும்புவேன். (மற்ற எல்லோரையும் பார்த்து) நான் போய் வருகிறேன். எல்லோருக்கும் என் அன்பு வணக்கம். - ஒன : நாங்களும் விடை பெற்றுக் கொள்ளுகிருேம், இடை! புலவர்களே! - இறை : போய் வாருங்கள்; நலமே! ஐயன்மீர்! வள் : (தமக்குள்) வாசுகி! உன் இறுதி வேண்டுகோளே நிறைவேற்றி விட்டேன். உன்னுடைய ஆன்மா அமைதி: அடைவதாக! - - -- எல்லோரும் : திருவள்ளுவர் வாழ்க! திருக்குறள் வாழ்க: - தமிழ் வாழ்க! வாழ்க!! (வாழ்த்தொலி முழங்குகிறது.) முற்றுப் பெற்றது.