பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாளர் காரண-துரைக்கண்ணன் அவர்கள் 1906-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதியன்று திருமயிலாப்பூரில் பிறந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். எழுதுகோல் தெய்வம் : எழுத்தும் தெய்வம்' என்று நம்பி இலக்கிய வாழ்வு கடத்திவருபவர். எனது தொழில் இலக்கியம் படைப்பது ' என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள் பவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிருநீர். லோகோபகாரி, தேசபந்து ஆகிய வார்ப் பத்திரிகைகளில் துனே ஆசிரியராகவும், திராவிடன், இந்தியா ஆகிய தினசரிப் பத்திரி கைகளில் துணை ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகளும், ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் ஆகிய இரு இதழ்களுக்கு ஆசிரியராக முப்பத்திரண்டு ஆண்டுகளும் பணியாற்றியவர்: சிறுகதை, காவல், நாடகம், இலக்கியக் கட்டுரைகள், வாழ்க்க வரலாறுகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் நூற்றுக் மேற்பட்ட நூல்கள் இயற்றியிருக்கிருர், ஜீவா, லியோ, வே. மைவண்ணன், துலாம் முதலிய புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு. தமிழ் இலக்கிய உலகில் ஒரு சிறப்பான தகுதி பெற் ஹிருப்பவர். தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியக் கலஞர்" என, பேரறிஞர்கள் இவரைப் புகழ்ந்து பாராட்டியிருக்கின்றனர். தமிழ்நாடு நாடக சங்கீத சங்கமும், தமிழ் எழுத்தாளர் சங்கங் களும் இவருக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தி இருக்கின்றன.