பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப்புலவர் திருவள்ளுவர் களம்-1. காட்சி-1 காலம் : நண்பகல் இடம் : திருவல்லிக்கேணி உறுப்பினர் : ஆதி, பகவன் (ஆதியும் பகவனும் திருவல்லிக்கேணி பக்கமாக நடந்து வருகின்றனர்.) ஆதி : అు இனி ஒரடிகூட எடுத்துவைக்க முடியாது; நாதா! - . ـ س - இடுப்பைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி நிற்கிருள்.) . . . பக : இன்னும் கொஞ்சந் துராந்தான், ஆதி சில தப்படிகள் நடந்து தென்னந் தோப்பைக் கடந்து விட்டால், ஊர் தான். அதோ தெரிகிறது. பார் கோபுரம். அதுதான் நாம் போய் தங்கப்போகிற கபாலீச்சுரம். சிறிது சிரமம் பாராமல் மெல்ல நடந்து வா. - ஆதி : பொழுது சாய்கிறபோது கூடப் பகலவன் இப்படிப் பொசுக்குகிருனே! தாகத்தால் நா வரள்கிறது, நாதா! கொஞ்சந் தண்ணீர் கிடைத்தால்...... . . . . . .