பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿嘉 15 இதற்காக என்னைக் குடும்பச் சூழலில் சிக்கிக் கொள்ளச் சொல்கிருயா? ஆதி! இந்தப் பந்த பாசமெல்லாம் கூடா தென்று தானே நான் பரதேசியாகப் பறந்து கொண்டிருக் கிறேன். உன்னேக் கூடமுதலிலேயே எதற்காகக் கேட்டுக் கொண்டேன், உற்ருர் பெற்றேர் என்ற நினைவு இருக்கக் கூடாது என்று. பெறும் பிள்ளைகளைக் கூட அவ்வவ்விடத் திலேயே விட்டு விட்டு வந்து விட வேண்டும் என்று வாக் குறுதி வாங்கிக்கொண்டதையெல்லாம் மறந்து விட்டாயா? ஆதி: உங்கள் ஒருவருக்கு ஆசாபாசம் இல்லாதிருந்தால் Liš: போதுமா? நீங்கள் எல்லோரையும் சமமாகப் பாவித்துச் சன்மார்க்கத் தொண்டும் புரிந்து வந்தால் போதுமா? மக்களெல்லோருக்குமே பிள்ளேப்பாசம், பிறந்த ஊர்ப்பற்று சாதியபிமானம், சமயப்பற்று முதலியன இருக்காமல் செய்ய வேண்டும். முக்கியமாக ஒரே தன்மைத்தான மக் களிடையே உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையுணர்ச்சி யுண்டாகாமல் செய்ய வேண்டும். இனி, இச்சமரச முயற். சியில் கவனஞ் செலுத்துங்கள். தாதா நம்மைப் போல பின்குல் வரும் சந்ததிகளாயினும் சாதி சமயப் பித்தினுல் துன்புருமல் வாழட்டும். அந்தப் பெரும் பணியை நம் பிள்ளைகள் செய்வார்கள். ஒளவையாரும், கபிலரும் சிறு வயதிலேயே தங்கள். பாடல்களால் மக்களுக்கு அறிவுரை கூறத் தொடங்கி விட் டார்கள். அடுத்துப் பிறக்க இருக்கிருனே அருமைக் குமா ரன், அவன் மக்களிடையே சமரசத்தைப் போதித்துச் சமத்துவத்தை யுண்டாக்கப் பேர்கிருன். உலகிலேயே ஓர் ஒப்பில்லாத சமுதாயத்தையுண்டாக்கப் பொது நீதி போதனைகளேக் காலத்துக்கேற்றபடி புதிய முறையில் போ திக்கப்போகிருன். நான் சொல்லுகிறேன். நீ வேண்டு மால்ை பாரேன். ஆதி நம்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக சமுதாயம் முழுவதுமே அவன் கூறப் போகும் பொது அறத்தை உவந்து ஏற்றுக்கொள்ளப் போகிறது.