பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அவனே ஈன்று புறந் தந்து பெரும் புகழடையப்போகும் நீ உன் மைந்தனின் பெருமையைச் செவி குளிரக் கேட்டு மகிழத்தான் போகிருய். ஆதி: உறுதியாகச் சொல்கிறீர்களே! ஆண் மகன் பிறக்கப் போகிருன் என்று. முக்காலமும் உணர்ந்த உங்களுடைய வாக்கு ஒரு போதும் பொய்த்ததில்லை. உங்களுடைய இன் மொழி என் மனதுக்கு எவ்வளவோ ஆறுதலாயிருக்கி றது, நாதா ஆல்ை, அது நிலத்து நீடித்திருக்க வேண்டும் என்று என் உள்ளம் அவாவுறுகிறது. பக: அப்படியே ஆகும். அமைதியாயிரு, ஆதி! . (பகவன் வானத்தைப் பார்த்து விட்டு ஆதி - பக்கந் திரும்புகிருர்.) . பக: நாம் புறப்படலாமா? ஆதி வெயில் கொஞ்சங் குறைந்தி ருக்கு. பொழுது சாய்வதற்குள் நாம் மயிலாப்பூர் போய்ச் சேர்ந்து விடவேண்டும். ஆதி (எழுந்து) போகலாம்.வாருங்கள், நாதா (இருவரும் போகின்றனர்.) காட்சி-2 காலம் : கால் இடம் : திருமயிலே உறுப்பினர் : ஆதி, பகவன் (ஒரு மர நிழலில் பச்சிளங்குழவி யொன்று தன் பொக்கை வாயைக் காட்டியவாறு கை கால்கண் உதைத்துக் கொண்டிருக்கிறது. ஆதி குழந்தையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிருள். பகவன் சீக்கிரம் புறப் படுமாறு அவளே அவசரப்படுத்துகிறர்.)