பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ஆதி: இந்தப் பச்சிளங்குழவியை இப்படியே கிடத்தி விட்டு எப்படிப் பிரிந்து வருவேன்? நாதா! நெஞ்சில் சிறிதும் இரக்கமின்றிச் சொல்கிறீர்களே ! பக: எவ்வளவோ படித்துப் படித்துச் சொல்லியும் உனக்குப் பேதமை போக மாட்டேன் என்கிறதே! ஆதி! ஆதி: உங்க மனம் என்ன கல்லா? இரும்பா? பக: (வருத்தத்தோடு புன்னகை செய்கிருர்.) ஆதி: ஆண்கள் மனமே இப்படித்தான் இருக்கும் போலிருக் கிறது. பிறந்து இன்னும் மூன்று நான்கு நாட்கள் கூட ஆக வில்லை. அதற்குள் பச்சிளங்குழந்தையை பதறப்பதற அழ விட்டு விட்டு வரச் சொல்லுகிறீர்களே! இப்படிச் சொல்ல உங்களுக்கு மனம் எப்படித்தான் துணிகிறதோ ? பக: அதிக நாள் ஆகக் கூடாதென்று தானே நான் அவசரப் படுகிறேன். குழந்தைக்குப் பெற்ற தாய் முகம் பழகி விட்டால் மடியை விட்டு இறங்காது. உனக்கும் பிள்ளைப் பாசம் அதிகமாகி விடும். - ஆதி: பாம்பு தான் தன் குஞ்சை விழுங்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதுபோல, நான் பெற்ற குழவியை நிராதரவாகச் சாக விட்டு வரச்சொல்கிறீர்களே! ஐயோ! * . (மேலே பேச முடியாமல் குமுறுகிருள்.) பக: பந்த பாசத்தை விட நமக்குக் கடமை முக்கியம் என்று உனக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். அப் படியிருந்தும்........? . . - ஆதி: நல்ல கடமை. கடமையாம் கடமை. பெற்ற பிள்ளையை அநாதையாய் விட்டுவிட்டுப் போவது தான் கடமையோ? பக: என்னுடைய குழந்தை, என்னுடைய குடும்பம் என்று என் போன்ருருக்கு குறுகிய அளவில் ஆசாபாசம் இருந்து விடக்கூடாது. ஆதி அகில முழுதும் உள்ள சகல ஜீவராசி கள்பாலும் அன்பும் ஆதரவும் காட்டிதொண்டுபுரிவதுதான் முனிவர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருடைய கட மையுமாகும் என்று எத்தனையோ முறை உனக்குப் பல