பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 காட்சி-3 காலம் : பிற்பகல் இடம் : திருமயில் உறுப்பினர் : வேளாளன் துள்ளுவன், அவன் மனைவி, குழந்தை - (மாந்தோப்பில் குழந்தை அழுது கொண்டி ருக்கிறது. தோப்புக்குள் வந்த வேளாளன் - ஒருவன் குழந்தையைப் பார்க்கிருன்.) குழந்தை : குவா குவா (தொடர்ந்து அழுகையொலி) (வேளாளன் குழந்தை அருகே சென்று. அதைப் பரிவோடு தூக்குகிருன், அவன் கண்கள் குழந்தையின் அழகைக் கண்டு வியப்புக் கொள்கின்றன. பின் அவன் குழந்தையைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கின்றர்களா வெனச் சுற்றுமுற்றும் பார்க்கிருன். அழும் குழந்தையை மார் போடு அணேத்து அமைதிப் படுத்திக் கொண்டே சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருக்கிருன் குழந்தையை நாடி யாரும் வராததைக் கண்டு அதைத் துரக் - கிக் கொண்டு தன் வீடு திரும்புகிருன்.) வேளாளன் : கோதை! எங்கே இருக்கே? கோதை : (அடுக்களேயிலிருந்து எட்டிப் பார்த்தவாறு) என் னங்க! வருகிற போதே இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என்ன சேதி? வே : நான் உனக்குப் பரிசு கொடுக்க ஒன்னு கொண்டு வந்தி ருக்கேன். வெளியே வந்துதான் பாரேன். கோ : (ஆவலுடன் வந்தவாறு) என்ன கொண்டு வந்திருக் கிறீங்க? வே: (மேல் துணியால் மூடி மார்போடு அணைத்துக் கொண் டிருந்த குழந்தையைத் தூக்கி அவள் முன் காட்டிய வாறு) இதோ பார்த்தியா! ஆண்டவனின் அருள்பிரசாதம்