பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குழந்தை : {பாடுகிறது) எவ்வுயிரும் காப்பதற்குஓர் ஈசன் உண்டோ, இல்லையோ? அவ்வுயிரில் யான் ஒருவன் அல்லளுே?-வவ்வி அருகுவது கொண்டுஇங்கு அலகுவதேன்? அன்னய்! வருகுவது தானே வரும். (ஆதி இது கேட்டு ஆச்சரியப்படுகிருள்.) பக (மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து) கேட்டாய ஆதி: குழந்தை பாடியதை. அதன் பொருளே நீ தெரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன். இதற்கு முன் பிறந்த ஆறு குழந்தைகள் அறிவுறுத்தியும் அறியாமை நீங்காது அலமந்து கொண்டிருந்த உனக்கு இந்த ஏழா வது குழந்தையின் இதோபதேசமாயினும் உன் பேதை மையை அடியோடு போக்கிவிடும் என்று நம்புகிறேன். ஆதி : (கண்களில் நீர் வழிய) மன்னித்து விடுங்கள், நாதா! என்னைப் பீடித்திருந்த மாயையும் மயக்கமும் அடியோடு நீங்கிவிட்டது. ஊம்; புறப்படுவோம். வாருங்கள். (பகவன் முன்னே செல்ல, ஆதி அவரைப் பின் தொடருகிருள். ஒர் அடியெடுத்து வைத்தவள், திரும்பிக் குழந்தையைத் தாவியெடுத்து உச்சி மோந்து முத்தமிடு கிருள்.) - ஆதி : கண்ணே! போய் வருகிறேனடா! எங்கும் நிறைந்தி ருக்கும் இறைவன் நீ பாடியதுபோல், உன்னைக் கை விடாமல் காப்பாற்றவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.