பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 காட்சி-4 காலம் : மாலே இடம் : திருமயிலே உறுப்பினர் : அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் (நாகலந்து பெண்களும் இரண்டு மூன்று கிழவர்களும் வேளாளன் வீட்டைப் பார்த்த வாறு பரிகாசமாகப் பேசிக் கொண்டிருக்கின் றனர்.) கற்பகம் : வேதம்! உனக்குச் சேதி தெரியுமா? வேதம் : என்ன! என்ன! அது? மங்கை : கோதை குழந்தை பெற்றிருக்காளே! தெரியாதா உனக்கு. வேதம்: என்னடி விளேயாடுரீங்க. கோதைக்காவது குழந்தை யாவது? - - கற் : இல்லே, மாமி கோதை யாரோ பெற்றுப்போட்டு எங்கோ கிடந்த ஒரு அநாதைப் பிள்ளேயைத் தூக்கி வச்சிகிட்டு சதா கொஞ்சிக்கிட்டிருக்காளே! அதைச் சொல்கிருள், வே . அப்பிடியா: சங்கதி! அது எனக்குத் தெரியாதே! கிழவர் ஒருவர் : காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு, அம்மா! அவரவர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலமின்னு தங்கள் மனம் போனபடி நடக்கிருங்க, அதுக்கெல்லாம் நாடி இடம் கொடுத்துக்கிட்டிருக்கோம். இன்னொரு கிழவர் : நம்ம சமூகக் கட்டுக் கோப்புதான் குலேஞ்சுப் போச்சே! அதகுல் தான் எல்லாருக்கும் எது வேண்டுமானலும் செய்யலாமின்னு தைரியம் உண்டா விட்டது.