பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லே இந்தக் குழந்தை எந்த இழிந்த சாதிப் பெண் பெற்றுப் போட்டதோ அறுதலி எவளாச்சும் இரகசியமாய் எறிந்து விட்டுப் போனுளோ! ஒழுங்கான குடும்பத்தில் ஒழுங்கான பெற்ருேருக்குப் பிறந்திருந்தால் இது அநாதையாய் தோப் பில் கிடந்திருக்காதே. கற் : இப்பிடி ஊர் பேர் தெரியாத குழந்தையை எடுத்து வந்து துள்ளுவ முதலியார் குடும்பம் எப்பிடி வளர்க்கலாம்? மங் : ஆமாம். எப்படி வளர்க்கலாம்? தட்டிக் கேட்க ஆள் இல்லேன்னு இவங்க எண்ணம் போலிருக்கு. வே : (கிழவர்களேப் பார்த்து) பெரியவங்க நீங்க எல்லாம் எதுக்கு இருக்கிறீங்க? ஒரு கிழவர் : நாங்க என்ன செய்வம்? நாங்க சொல்வதை இந்தக் காலத்துப் பிள்ளைங்க எங்கே கேட்கிருங்க? மங் : ஏன்? ஊர்ப் பஞ்சாயத்து சபை எதுக்கு இருக்கு? அதைக் கூட்டி விசாரணை நடத்திக் கட்டுப்பாடு விதிக் கணும். கற் : ஆமாம். சமூகக் கட்டுப்பாடு; சாதிப் பிரஷ்டமின்னு: தம்ம மூதாதைங்க செய்தது போல தாட்சணியம் பாராமல் நடவடிக்கை யெடுத்தால் எல்லாம் ஒழுங்காய் விடும். வே : தாத்தா நான்க்கே நாட்டாண்மைக்காரரிடம் சொல்லி துள்ளுவ முதலிக் குடும்பத்தின் மீது நடவடிக்கை யெடுக் கச் சொல்லுங்க, இச்சமயம் வேளாளன் துள்ளுவன் அவ்: வழியாக வருகிருன். அவன் வருகையைப் பார்த்ததும் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்த இவர்கள் மெல்ல கலந்து செல்கின்றனர்.)