பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 காட்சி-5 காலம் : காலே இடம் : வேளாளன் வீடு உறுப்பினர் : துள்ளுவன், கோதை (துள்ளுவன் வருத்தத்துடன் வீட்டுக்குள் வருகிருன், எதிர் கொண்டு அழைக்க வந்த கோதை அவன் முக வாட்டத்தைக் கண்டு திடுக்கிடுகிருள்.) கோ: என்னங்க! ஒரு மாதிரியா இருக்கீங்க! என்ன சமாசாரம்? துரள் : என்னத்தைச் சொல்வேன்? கோதை: பஞ்சாயத்து நம் மீது பாணம் தொடுத்திருக்குது. நாம் அநாதைப் பிள்ளே எதையோ எடுத்து வந்து வளர்த்து ஆட்டம் போடுகிருேமாம். இதஞல் சமூக கெளரவமே கெட்டுப் போயிட்டதாம். கோ : அப்பிடி யார் சொன்னது? நாட்டாண்மைக்காரையாவா? துள் : அவரு என்ன செய்வார்? ஊரு வம்பை விலேக்கு வாங்கி விளையாடுகிற வீனர்களுடைய விதண்டா வாதம் இது. கோ : ஆப்பிடியா? அவங்க என்ன தான் சொல்கிருங்க ? துள் : அநாதைக் குழந்தையை நம் வீட்டில் வைத்து வளர்க் கக் கூடாதாம். நம் ஜாதிக்காரங்க, சொந்தக்காரங்களுக் கெல்லாம் இது தலே குனில்ை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்த ஊராருக்கே இது கேவலமாகப் படுகிறதாம். கோ : அதுக்காக நாம் என்ன செய்யனுமாம்? துள் : குழந்தையை எடுத்துக்கிட்டு போய் ஊருக்கு வெளியி லே விட்டுடனுமாம். - கோ : என்ன! என் கண்மணியையா? தி-2.