பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 துள் ஆமாம். கோ : ஐயோ, கடவுளே! கண்ணக் கொடுத்துட்டு மறுபடி யும் பிடுங்கிக்கிறயே? இது நியாயமா? (கதறுகிருள்.) துள் : நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டேன். அவங்க மனம் இரங்கல்கல. கோ : அப்புறம்? துள் : நான் ரொம்ப மன்ருடிக் கேட்டுக்கிட்டதன் பேரில் குழந்தையிை நம்ம வீட்டுப் புறக்கடையில் மாட்டுத் தொழுவத்தில் வச்சி வேணுமின்ன வளர்க்கலாமின்னு அனுமதித்தாங்க. - கோ : நம்ம ராஜாவை ஆடு மாடுகளே அடைத்து வைக்கும் தொழுவத்திலா கிடத்தனும்? - துள் : வேறு என்ன செய்வது? இதுக்காவது அனுமதித்தார் களே. அவங்க மனம் மாறும் வரை தொழுவத்தில் தொட்டில் கட்டிப்போட்டு குழந்தையைப் பாதுகாத்து வருவோம். (கோதை குழந்தையை முகத்தோ டு சேர்த்து வைத்துக் கொண்டு குமுறுகிருள். துள்ளுவன் இத்துயரக் காட்சியைக் காணப் பொருமல் வெளியே போகிறன்.) காட்சி-6 காலம் : கால் இடம் : குருகுலம் உறுப்பினர் : வள்ளுவன், உடன் படிக்கும் பிள்ளைகள் (சிறுவன் வள்ளுவன் கையில் ஏடுகளுடன். குருகுலத்தை நோக்கி வருகிருன். மான வர் சிலர் அவனைப் பார்த்துப் பரிகாசஞ் செய்கினறனர்.)